Arab Tamil Daily
567 views
20 days ago
குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் குடிமகன் கைதாகியுள்ளார்: குவைத்தில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதலை நடத்த முயன்ற குவைத் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய இவரை தீவிர விசாரணைகள் மற்றும் கண்காணிப்புக்குப் பிறகு கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று(25/11/25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஒரு பயங்கரவாத அமைப்பின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து வெடிபொருட்களை தயாரித்து பெரும் அளவிலான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பது கண்டறியப்பட்டது. சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களின் வழியாக பயங்கரவாதக் கருத்துக்களை பரப்பி சிறார்களை ஈர்ப்பது மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவை திரட்டுவதும் நோக்கமாக கொண்டு அவர் செயல்பட்டு வந்தார் என்பதையும் உள்துறை கண்டறிந்துள்ளது. இதேபோல் கடந்த மாதங்களிலும் இதே திட்டத்துடன் செயல்பட்ட சிலரை உள்துறை கண்டறிந்து கைது செய்து தாக்குதல் திட்டத்தை முறியடித்திருந்தனர். இந்நிலையில் இந்த நபர் கைது தொடர்பான செய்தியை உள்துறை இன்று வெளியிட்டுள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. #🔥இன்றைய முக்கிய செய்தி 📰🗞️