SIVASAKTHI M
4.1K views
3 months ago
*மோகன்தாசு கரம்சந்த் காந்தி* (அக்டோபர் 02, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் *ஒரு இந்திய வழக்குரைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும்* ஆவார். இவர் *மகாத்மா காந்தி* என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் *விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை* என்று அழைக்கப்படுகிறார். *சத்தியாக்கிரகம்* என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் *காந்தி ஜெயந்தி* என்று கொண்டாடப்படுகிறது. #காந்தி ஜெயந்தி #காந்தி #இந்தியா #தேச தந்தை #😔தனிமை வாழ்க்கை 😓