முதல் துளி விழுந்தவுடன்
உன் முகம் நினைவில் மலர்ந்தது
அந்த மழை ஒலி கூட
உன் சிரிப்பு சத்தம் போலிருந்தது.
காற்று வந்தது மெதுவாக,
உன் முடி பறந்ததுபோல என் மனம் கலங்கியது
மழைத் துளிகள் விழும் ஒவ்வொரு தருணமும்
உன் தொடுதல் போல என் கன்னத்தில் உருகியது.
சாலை நனைந்திருந்தாலும்
என் இதயம் தீப்பொறி
ஏனெனில் நீயே அந்த மழையில் நடந்தாய்
நான் உன் நிழலை மட்டும் பார்த்தேன்…
கையில் குடை இருந்தது
ஆனால் நீ பக்கத்தில் இல்லாததால்
முழு மழையும் என்னை நனைத்தது
அதிலும் ஒரு இனிமை இருந்தது…
ஏனெனில் அந்த குளிர் உன்னுடையது ❤️🌧️
#🏏 கிரிக்கெட்