ஊழல் குற்றச்சாட்டு உள்ள யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம்.. பிற கட்சியில் உள்ள மூத்த தலைவர்களும் வேண்டாம்.. முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்றால் ஓகே.. சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களுக்கு பச்சைக்கொடி.. கட்சியில் சேர்க்க கட்டுப்பாடுகளை விதித்தாரா விஜய்? மக்களிடம் மிஸ்டர் க்ளீனாக செல்ல வேண்டும் என திட்டமா?
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்வது மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது குறித்து விஜய் சில கடுமையான கட்டுப்பாடுகளையும், வியூகங்களையும் வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தியில் தனது கட்சியை ‘மிஸ்டர் க்ளீன்’ பிம்பத்துடன் நிறுத்துவதே இதன் முதன்மையான நோக்கம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கட்சியின் நம்பகத்தன்மையையும், தூய்மையையும் உறுதி செய்வதற்காக, நடிகர் விஜய் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்களைத் தனது கட்சியில் சேர்ப்பதற்கு தடை விதித்துள்ளதாக தெரிகிறது. அதேபோல் திராவிட கட்சிகள் அல்லது பிற கட்சிகளில் இருந்து விலகி வரும், ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களை எதிர்கொண்ட எந்தவொரு நபரையும் த.வெ.க.வில் முக்கிய பதவிகளில் சேர்ப்பதற்கோ அல்லது வேட்பாளர்களாக நிறுத்துவதற்கோ அனுமதி இல்லை.
இது, தமிழ்நாட்டின் பாரம்பரிய அரசியலுக்கு முரணான ஒரு புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் நிலவும் ஊழல் வெறுப்பு மனநிலையை பயன்படுத்தி, தமது கட்சிக்கு ஒரு மாற்றான, தூய்மையான பிம்பத்தை உருவாக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
பிற கட்சிகளில் இருந்து விலகி வரும் மூத்த அல்லது பலம் வாய்ந்த தலைவர்களையும் உடனடியாக தனது கட்சியில் சேர்த்து கொள்வதற்கு விஜய் தயக்கம் காட்டுவதாகவும், இதுவும் ஒரு திட்டமிட்ட வியூகத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் பிற கட்சியில் இருந்து வருபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற நிலையில் விஜய்யின் அணுகுமுறை வித்தியாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், வெளிப்படையான நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் மற்றும் நல்ல பெயர் பெற்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை தனது கட்சியில் இணைத்துக்கொள்ளத் விஜய் ஆர்வம் காட்டுகிறார். இவர்களின் நிர்வாக அனுபவம் மற்றும் தூய்மையான பின்னணி, த.வெ.க.வின் ‘மிஸ்டர் க்ளீன்’ திட்டத்திற்கு வலு சேர்க்கும்.
அதேபோல் சமூக பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வும், கள அனுபவமும் கொண்ட சமூக செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் நடுநிலை எண்ணம் கொண்ட பத்திரிகையாளர்களுக்கும் கட்சியில் முக்கிய பங்கு வழங்க விஜய் திட்டமிட்டுள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சேர்க்கை, கட்சிக்கு சட்டரீதியான ஆலோசனைகளையும், நம்பகமான நிர்வாக திட்டங்களையும் உருவாக்க உதவும் என்பதே விஜய்யின் எண்ணமாக தெரிகிறது.
மொத்தத்தில் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தை பழைய அரசியல் வியூகங்களின் நிழலில் இருந்து விலக்கி, தூய்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக திறன் ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் கட்டமைக்க முயற்சிக்கிறார். இந்த வியூகம் 2026-ல் அவருக்கு எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல் #❤️தல அஜீத் ரசிகர்கள் குரூப்❤️ #தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்