Cholan News
852 views
#😱டிட்வா புயல் - 85 பேர் பலி 🌪️ #🔴ஜாக்கிரதை: உருவானது சென்யார் புயல்🌪️ #😨உஷார்! வெளுக்கப்போகும் கனமழை⛈️ #🔴4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்😱 #😱இலங்கையை புரட்டிப் போட்ட புயல்🌪️ இலங்கை டிட்வா புயலால் உயிரிழப்பு எண்ணிக்கை 85-ஆக அதிகரிப்பு! இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். இது குறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் அவர்களை தேடும் பணி நடைபெற்றது. எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மாயமான 21 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், அண்டை நாடான இந்தியா முன்வந்துள்ளது. டிட்வா புயலுக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து உள்ளார்.