#🌸தேசபக்தி கோட்ஸ்😍
அயோத்தியின் ராணி - இந்திய விடுதைலைக்காக போராடி வீழ்ந்த ஒரு தாயின் மூடி மறைக்கப்பட்ட வரலாறு.!
சங்பரிவார காவி கூட்டம் இந்தியாவின் வரலாறுகளை பாட புத்தகம் மற்றும் வரலாற்று பத்தகங்களில் இருந்தும் பொய் புரட்டு ஆகியவைகளை கொண்டு மறைத்தும் திரித்தும் வருகின்றனர். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மறைக்கப்பட்ட பல்வேறு வரலாற்று சுவடுகளில் இதுவும் ஒன்று..
அயோத்தியின் அரசியாக இருந்து ஆட்சி செய்தவர் பேகம் ஹஜ்ரத் மஹல். உத்திரப்பிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் 1820 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இவரது கணவர் நவாப் வாஜித் அலி ஷா ஆவார்.
பேகம் ஹஜ்ரத் மஹல் அயோத்தியின் ராணியாக இருந்த போது தன் நாட்டு மக்களுக்காக பொற்கால ஆட்சியை வழங்கினார். நடுநிலையான ஆட்சி மற்றும் தனிப்பெரும் ஆளுமையின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.
ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தான் ஒரு ராணி என்பதையும் தாண்டி தனது சிப்பாய்களோடு இணைந்து விடுதலை படையை உருவாக்கினார். வெள்ளையனை விரட்ட வீர களம் கண்டார். முதல் இந்திய சுதந்திரப்போரில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தார். பிறகு தோல்வியை தழுவினார். அயோத்தியின் ராணியாக இருந்த பேகம் ஹஜ்ரத் மஹல் சுதந்திர போரில் தோல்வியை தழுவியவுடன் அவருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு எந்த இந்திய மன்னனும் முன் வரவில்லை.
இதனால் தனது கடைசி காலத்தில் இமய மலையின் அடிவாரக் காடுகளில் தனது 10 வயது மகனோடு அநாதையாக வாழ்ந்து வந்தார். ஏப்ரல் 7, 1879 அன்று நேபாள தலைநகர் காத்மண்டுவில் மரணத்தை தழுவினார் அந்த வீரத் தாய்.
அயோத்தியின் ராணியாக இருந்த பேகம் ஹஜ்ரத் மஹல் இந்திய விடுதலைக்காக போரிட்டு அநாதையாக மரணமடைந்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வராலாறுகளைதான் சங்பரிவார்கள் கூட்டத்தினர் மறைக்கிறார்கள் திரிக்கிறார்கள்.
இதனால் இந்திய முஸ்லிம்களுக்கு அவமானம் அல்ல. அந்த பெண்ணை இழந்த இந்த மண்ணுக்கு தான் அவமானம்.
#🙏 பெருமைக்குரிய இந்தியர்கள் 🌟 #💪🏻சுதந்திர போராட்ட வீரர்கள்✨ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #💪🏻இந்தியாவின் புகழ்பெற்ற நபர்கள்💪