ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் 98427 57275
548 views
1 months ago
ராசிக்கற்களின்(நவரத்தினங்கள்) பயன்பாடு/புரிதல்... ஜோதிட சாஸ்திரத்தின் ஓர் அங்கமே ரத்தின சாஸ்திரமாகும். நவரத்தினங்களில் ஏராளமான வகைகள் உள்ளன.அவற்றில் நவக்கிரகங்களுக்கென குறிப்பிட்ட ரத்தினங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அவை சூரியனுக்கு மாணிக்கம்,சந்திரனுக்கு முத்து, செவ்வாய்க்கு பவளம் ,புதனுக்கு மரகதப்பச்சை,குருவுக்கு கனகபுஷ்பராகம், சுக்கிரனுக்கு வைரம்,சனிபகவானுக்கு நீலக்கல்,ராகுவிற்கு கோமேதகம், கேதுவிற்கு வைடூரியம் ஆகும்.இவற்றிற்கு மாற்றாக உபரத்தினங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ராசிக்கற்கள் அணிவதில் மிகுந்த கவனம் தேவை.உங்கள் சுய ஜாதகத்தில் கிரகங்களின் பலம்/ பலவீனம் மற்றும் நடப்புதிசை ஆகியவற்றை பொறுத்துதான் ராசிக்கற்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.ஏனென்றால் சில ராசிக்கற்கள் எதிர்மறையான பலன்களை உண்டாக்க வாய்ப்புள்ளது.உங்கள் சுய ஜாதகத்தை ஆய்வுசெய்து சரியான ராசிக்கற்களை தேர்ந்தெடுத்து தகுந்த விரலில் அணிவதே நல்லது.தற்போது நடைமுறையில் பொதுவாக அவரவர் ராசிக்கு உண்டான கற்களை தேர்ந்தெடுத்து அணிகின்றனர்.அது அனைவருக்கும் நற்பலன்களை தருவதில்லை. உதாரணத்திற்கு மேஷ லக்னம். ராசி மகரம் அல்லது கும்பம் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு ராசிக்கல் என்று சனிபகவானுக்குரிய நீலக்கல்லை பெரும்பாலும் அணிந்து கொள்கிறார்கள். ஆனால் மேஷ லக்னத்திற்கு சனிபகவான் பாதகாதிபதி. மேஷ லக்னத்திற்கு சனிபகவான் மகரம்,கும்பம் மற்றும் துலாம் ராசிகளில் ஆட்சி,உச்சம் என்ற நிலையில் இருந்தால் நீலக்கல்லை அணியும் போது பாதகாதிபதி சனிபகவான் மேலும் பலம் பெறுகிறார். பாதகாதிபதியை மேலும் கற்களை அணிந்து பலப்படுத்தும் போது திசை புத்திகளில் கெடுபலன்களைத்தான் கொடுப்பார். உங்கள் சுய ஜாதகத்தில் லக்ன பாதகாதிபதி,மாரகாதிபதி,யோகாதிபதிகளின் பலம்,பலவீனம் நடப்பு திசை புத்தியை ஆய்வு செய்து அதற்குத் தகுந்தார் போல் ராசிக்கற்களை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் நண்பர்களே... நல்ல தரமான ஒரிஜினல் ராசிக்கற்கள் நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும்.ராசிக்கற்களை கிரகங்களை பலப்படுத்தவும்,கிரகங்களின் காரகத்துவங்களை அனுபவிக்கவும் பயன்படுத்துகிறோம்.லக்ன மாரகாதிதிபதி மற்றும் பாதகாதிபதிக்கு உண்டான ராசி கற்களை அணிவதால் தீமையான பலன்களே ஏற்படும்.6/8/12ம் அதிபதிகளுக்கு உண்டான ராசிகற்கள் அணிந்தால் தீய பலன்களே ஏற்படும்.அப்படி அணிவதாக இருந்தால் அந்த கிரகம் சுபத்தன்மை அடைந்து இருக்கவேண்டும்.1,5,9ம் அதிபதிகள் 6/8/12ல் நின்றால் அந்த கிரகத்தின் திசை நடப்பில் வரும்போது அதற்குண்டான ராசிக்கற்களை அணியலாம்.திசை முடிந்தால் கழற்றி விடுவதே நல்லது.சூரியனுக்குண்டான மாணிக்க கல்லையும், சுக்கிரனுக்கு உண்டான வைரக்கல்லையும் சுய ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் நல்லநிலையில் இருந்தாலும் சோதித்துப் பார்த்த பின்னரே அணிய வேண்டும். விதிவிலக்கு:பரிபூரண முழு இயற்கை சுபரான குருபகவானுக்கு உண்டான கனகபுஷ்பராக கல்லை பொதுவாக அனைவரும் அனைத்து நேரங்களிலும் பயன்படுத்தலாம்.கர்ம காரியங்களில் கலந்து கொள்ளும் போதும், தீட்டு காலங்களிலும், அசைவம் சாப்பிடும் போதும் ராசிக்கற்களை கழற்றி வைத்து விட வேண்டும்.அப்படி தவறும் பட்சத்தில் ராசிக்கல்லை ஒரு இரவு விபூதியிலோ அல்லது சுத்தமான பசும்பாலிலோ போட்டு சுத்திசெய்தபின்பு அணிந்து கொள்ளலாம். ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் குறிப்பு: அடியேனின் ஜோதிட அனுபவ ஆய்வுக்கட்டுரைப்பதிவுகளை தொடர்ந்து பார்வையிட கீழே உள்ள லிங்கில் சென்று குழுவில் இணைந்து கொள்ளவும் நண்பர்களே. Facebook link: https://www.facebook.com/groups/4141332219242280/?ref=share #ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம் Page link: https://www.facebook.com/sriselvanayakiammanastro/ Instagram link: https://instagram.com/astro_sri_selvanayagi_amman Subscribe to youtube link: https://youtube.com/channel/UCVLM0NuIJeGCv5Lk-EIGUSw உங்களின் தனிப்பட்ட சுயஜாதகத்தை கட்டண முறையில் ஆய்வு செய்ய விரும்பினால் 9842757275 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். தயவுசெய்து கமெண்ட்டில் ஜாதகத்தை பதிவிட்டு பலன் கேட்காதீர்கள்.சந்தேகங்கள் ஆலோசனைகளுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளவும்.கமெண்டில் அனைவருக்கும் பதில் அளிக்க நேரம் ஒதுக்க முடிவதில்லை... நன்றி

More like this