பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
861 views
ஸ்ரீ (969)🏹🚩"காமராஜர் ஆட்சியில்தான் ஊழலும் தொடங்கியது, க*ள்ளநோட்டுகளும் புழக்கத்தில் வந்தது" என்று அழுத்தம் திருத்தமாக தனது youtube சேனலில் பதிவு செய்துள்ளார், பத்திரிக்கையாளர் முக்தார்.. காமராஜரை ஒருஊழல்வாதி என்று இவர் பதிவு செய்ய ஒருமுக்கிய காரணம் உண்டு.. அது என்ன என்று இந்த பதிவின் கடைசியில் பார்ப்போம்.... காமராஜர் பற்றி இதுவரை யாரும் படிக்காத, பார்க்காத ஒருபக்கத்தை இங்கே பதிவிட விரும்புகிறேன்.. "காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் இ*றந்தவுடன் கண்ணதாசன் ஒருபதிவு செய்கிறார்.. "தனது தாயின் ம*ரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார், பல்லாக்கு கட்டுபவர்கள் இலவசமாக கட்டிக்கொடுக்கிறார்கள்.. வந்தவர்களுக்கு ஒருவேளை சோறு போட இடமும் இல்லை, பணமும் இல்லை. 10 வருஷம் ராஜாங்கம் நடத்தினான் மகன் பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி".. இது கண்ணதாசன் காமராஜரின் தாய் சிவகாமியம்மாள் மறைந்த போது எழுதிய வாக்கியம்.. குமுதம் எழுத்தாளர் மணா மணா அவர்கள் 1995 ஆம் ஆண்டு காமராஜர் பற்றி குமுதம் வார இதழில் எழுத விருதுநகரில் உள்ள காமராஜர் வீட்டிற்கு போய் உள்ளார். அப்போது காமராஜரின் வீடு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.. காமராஜர் வீட்டின் அருகில் இன்னொரு வாடகை வீட்டில் காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாக சொன்னதும், அங்குபோய் உள்ளார் குமுதம் பத்திரிக்கையாளர். இதோ குமுதம் பத்திரிக்கையாளர் மணா மணா அவர்கள் தன் குறிப்பில் பதிவு செய்தவை.. "அது மிக எளிய வீடு.. காமராஜர் மறைந்த பிறகு காமராஜருக்கு "பாரத ரத்னா" விருது கொடுக்கப்பட்ட போது அதைப் பெற்றுக் கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர்கள்தான்.. 63 வயதான காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையின் பிடியில் போயிருந்தார்.. கணவர் இ*றந்து விட அவருடைய மகன்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் ரூ500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. அது மிகக்குறைந்த வருமானம்தான், அதனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க வைத்திருந்தது.. அந்தத்தாய் கமலாதேவி இந்த பத்திரிக்கையாளரிடம் கண்ணீர் மல்க சொன்னது.. "நாங்க ஏழு பேர் இருக்கோம், சாப்பிடவே கஷ்டமா இருக்குதுப்பா.. கஷ்டம் தாங்காமல் கலெக்டர் காலில் கூட விழுந்து அழுது கூட கேட்டுப்பார்த்து விட்டோம் எந்த வேலையும் கிடைக்கவில்லை தம்பி.. என்றபோது அருகில் அமர்ந்திருந்த காமராஜரின் தங்கையான நாகம்மாளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.. தன்மகள் அருகில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, பெருக்கும் வேலை, பாத்திரம் கழுவும் வேலை, துணி துவைக்கும் வேலை செய்து வருகிறார்.. என்று மெல்லிய குரலில் தனது மகளின் நிலை குறித்து சொல்கிறார் காமராஜரின் தங்கை நாகம்மாள்.. பின், கமலாதேவி கையெடுத்து கும்பிட்டபடி குமுதம் பத்திரிக்கையாளரிடம் ஒருவேண்டுகோள் வைக்கிறார்.. "ஐயா, அருகிலுள்ள எங்கமாமா வீடு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.. அந்த வீட்டில், வீட்டை சுத்தம் செய்கிற வேலையாவது வாங்கி கொடுங்கள்,உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்.. அந்த வேலை செய்தாளாவது,கையில் ஐம்பதோ நூறோ கூலியாக கிடைக்கும் இல்லையா?.. ஆனால் எனது தாய் இதை அவமானம் என்கிறார்.. எனது மாமா காமராஜர் இருந்த நேர்மைக்கு கெட்ட பெயர் உண்டாகும் என்றும் கூறுகிறார்.. ஆனால் எங்கள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறபோது எங்கள் மாமா வீட்டை சுத்தம் செய்வதால் என்ன அவமானம் இருக்கப் போகிறது எங்களுக்கு" என்று அழுதபடி ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள், சேலை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டே சொன்னார்.. பத்து ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட ஒரு முதல்வரின் மருமகள் ஒரு பத்திரிக்கையாளரை கையெடுத்து கும்பிட்டு உதவி கேட்ட போது.. அந்த சூழ்நிலையில் உடல் எல்லாம் முள் குத்துவது போல உணர்ந்தேன் என்று பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் மணா மணா. பின் 1995 ஆம் ஆண்டு மே மாதத்தில் குமுதத்தில்.. "வீட்டு வேலை செய்யும் காமராஜரின் மருமகள்" என்ற தலைப்பில் பத்திரிகையாளரின் கட்டுரை வெளியானது.. குமுதத்தில் இந்தக்கட்டுரை வெளிவந்த மறுவாரத்தில் ஒருஆச்சரியம் நிகழ்ந்தது.. அப்போது முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா அவர்கள் காமராஜரின் குடும்பத்திற்கு ஒரு சொந்த வீடும்,அரசு வேலையும், அந்த குடும்பத்தின் பெயரில் வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட் பண்ணுவதாகவும் அறிவித்தார்.. இந்த மகிழ்ச்சியான தகவலை விருதுநகரில் உள்ள கமலாதேவியின் வீட்டிற்கு நேரில் சென்று சொல்ல,சென்றார் பத்திரிக்கையாளர் மணா மணா, இந்த பத்திரிக்கையாளரை கண்டவுடன் அந்த குடும்பத்தினர் அனைவரும் கையெடுத்து கும்பிட்ட படி கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள்.. அப்போது தனது பிறவிப் பயனை அடைந்ததாக அந்த பத்திரிகையாளர் பதிவுசெய்துள்ளார்.. ஒரு பத்திரிக்கையாளரின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.. 1967-ல் நடந்த தேர்தலில் காமராஜர் தோற்கவில்லை, மக்கள் தோற்று விட்டோம்.. என்பதுதான் நிதர்சனமான உண்மை.. காமராஜர் ஆட்சி, ஊழல் செய்தார் என்றால் தன் குடும்பம் அல்லவா செல்வாக்காக வாழ்ந்திருக்க வேண்டும்.. காமராஜர் ஆட்சியில் அவர் கண் முன் தெரிந்து எந்த தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நாம் சொல்லலாம்.. சரி, முக்தார் ஏன் அவ்வாறு பதிவு செய்கிறார் என்று பார்ப்போம்.. சிலமாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் முக்தார் பற்றிய ஒரு வீடியோ வைரலானது.. ஒரு மிகப்பெரிய பாரில் இன்றைய பல போலிபத்திரிக்கையாளர்கள் ஒன்றாக இருந்தார்கள்,மது அருந்தியப்படியான வீடியோ அது.. பலர் பார்த்திருப்பீர்கள்.. அதில் முத்தாரும் ஒருவர்.. அதில் அவர் பேசியிருந்தது "யாரின் பெயரை கெடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறி என்னிடம் பணம் கொடுத்தால், அதை நான் சிறப்பாக செய்வேன்' என்று சிரித்தபடி கூறினார்" நாங்கள் சொல்வதை எல்லாம் மக்கள் வேதவாக்கு போல் நம்புகிறார்கள் என்று மற்றொரு பத்திரிகையாளர் கூறினார்".. இப்போது நம்நாட்டில்,இந்த சமுதாயத்தில் சத்தம் இல்லாமல் வரலாற்றை மாற்றும் வேலை நடந்து வருகிறது.. அதற்காக பல்லாயிரம் கோடிகளும் செலவு செய்யப்பட்டும் வருகிறது.. என்று சமுதாயத்தை நேசிக்கும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன்பதிவிட்டு வருகிறார்கள்.. உதாரணமாக நம்மிடம் அரசியல்வாதிகள் சொல்வது காமராஜரின் ஆட்சியை நான் அமைப்பேன் என்று.... அந்த பிம்பம் உடைய வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.. இதற்காகவே பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பலர் பேர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள்.. ஆனால் அவர்கள் எல்லாம் ஒன்றை மட்டும் மறந்து விட்டார்கள்.. "பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை.. உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை" என்பதை.. என்னுடைய கருத்தாக அனைத்து உறவுகளுக்கும் இங்கு நான் இறுதியாக சொல்வது.. நேதாஜி அவர்கள் சொன்னதைத்தான்.. "ஒரு கட்சியின் பின்னால் நின்று கொண்டு அந்தக் கட்சி சொல்வதற்கெல்லாம் சரி என்று தலையாட்டுவது என் செருப்பிற்கு சமம்" என்பதை மனதில் வைத்துக் கொண்டு இணையத்தில் வரும் இதுபோன்ற தவறானசெய்திகளை ஆராய்ந்து பார்த்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.. (pic Help-AI) நன்றி.. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.. சத்தியவர்மன்.VN. (Aththanoortex) #கர்ம வீரர் காமராஜ்