ல.செந்தில் ராஜ்
404.8K views
3 months ago
முருகனை வீட்டுக்கு அழைக்கும் முறை ஓம் முருகா ஓம் கந்தா சரணம் 🔺இன்றிலிருந்து கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. ♦️முருகன் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். முருகன் மீது தீவிரமான பக்தியில் திளைத்து இருப்பீர்கள் முருகனை வழிபட பலவிதமான வழிபாடுகளும் முறைகளும் இருக்கிறது. முருகன் மீது அதி தீவிரமான பக்தியில் இருந்தாலும் முருகன் அருளை பெறுவது எளிதான விஷயம் அல்ல. 🔻முக்கியமாக முருகனை உங்கள் இல்லத்திற்கு அழைப்பதும் மிகப் பெரிய கடினமான விஷயம் ஆகும் ஆனால் உண்மையான பக்தி உண்மையான அன்பு இருந்தால் கட்டாயம் முருகன் உங்கள் இல்லத்தில் வந்து உங்களுக்கு அருள் பாலிப்பார்‌. உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் ♦️உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு வழியில் வந்து உங்கள் அன்பை பரிசோதித்து உங்களுக்கு தரிசனம் அளிப்பார். சரி முருகனை எப்படி இல்லத்திற்கு அழைப்பது அவருக்கு எப்படி நீங்கள் விருந்து அளிப்பது என்பதை பார்க்கலாம் இதனை எல்லாராலும் செய்ய இயலாது ஆனால் முயற்சி செய்தால் உங்களாலும் முடியும் உங்கள் பக்தியால் முடியும் உங்கள் மனோ சக்தியால் முடியும். பின்வரும் முறைகளில் ஏதாவது ஒரு முறையை தொடர்ந்து செய்யுங்கள் கட்டாயம் நடக்கும் நீங்கள் கேட்டது கிடைக்கும் நவ கிரகங்களின் தன்மைகளை மாற்றக்கூடிய மாற்றி அமைக்கக்கூடிய நவகிரகங்களின் வேகத்தை குறைக்க கூடிய ஆற்றல் முருகப் பெருமானுக்கு உண்டு 🌹நேரம் இருப்பவர்கள் தினமும் கந்த சஷ்டி கவசத்தை பத்தியுடன் படிக்கலாம் முடியாதவர்கள் கேட்கலாம் செவ்வாய்க்கிழமை தோறும் கந்த சஷ்டி கவசத்தை படிக்கவும். ♦️வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டிகளில் முருகப்பெருமானை நோக்கி விரதம் இருந்து வழிபாடு செய்வது மூலம் முருகன் அருளை பெறலாம். முக்கியமாக குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் திருமணத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் சஷ்டி அன்று விரதம் இருந்து செவ்வாய் ஓரையில் ஒரு இடத்தில் அமர்ந்து முருகனை மனதார நினைத்து ஓம் நமச்சிவாயம் ஓம் சரவணபவ என்று 108 1008 முறை வாய் திறந்து உச்சரித்தால் நீங்கள் கேட்கும் வரம் கிடைக்கும் ♦️முருகனை வீட்டிற்கு அழைக்கும் முறை வளர்பிறை சஷ்டி ஒன்பது வளர்பிறை சஷ்டி அன்று விரதம் இருந்து முருகனுக்கு உணவு படைத்த பின் உணவருந்த வேண்டும் வளர்பிறை சஷ்டி அன்று 9 மண் விளக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் மாலை வேளையில் இதனை செய்ய வேண்டும் முருகனுக்கு சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் ஒன்பது முறை கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் இதனை ஒன்பது வாரங்கள் அதாவது 9 சஷ்டி தினத்தில் அனுசரணை செய்தவர்களுக்கு முருகன் கனவில் தோன்றி அருள் பாலிப்பார் நீங்கள் கேட்கும் வரம் கிடைக்கும் மேலும் ஒரு குறிப்பிட்ட நாளில் பக்தர்கள் வடிவில் யாசகராக வந்து உணவு அருந்த காத்திருப்பார் நீங்கள் அவர்களை உதாசனப்படுத்தாமல் உணவு அளிக்க வேண்டும் சஷ்டி அன்று இது நடைபெறும் இல்லையெனில் ஏதாவது ஒரு தினத்தில் கட்டாயம் உணவு சமைக்கும் வேளையில் யாசகர்கள் வருவார்கள் யாசகர் உருவத்தில் அந்த முருகப்பெருமானை வருவார் இது அனுபவ ரீதியில் என் தாயார் பெற்றது உங்களுக்கும் கிடைக்கும் உங்கள் கரங்களிலால் உணவை பெற்று உண்டு மகிழ்வார் இது கட்டாயம் நடைபெறும் மனதார நினைத்து விரதம் இருக்க வேண்டும். ♦️மேற்கூறிய முறையில் விரதம் இருந்து முருகன் அருளையும் பெற்று உங்கள் கரங்களால் இறைவனுக்கு உணவளிப்பது மிகச் சிறப்பான விஷயம் அதனை அதிதீவிரமாக செய்பவர்களுக்கு அந்த முருகன் கட்டாயம் அருள்புரிவார் முக்கியமாக முருகன் பக்தர்களை கை விடுவதில்லை ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு உதவி செய்வார் #ஓம்நமச்சிவாய #murugan #முருகன் #🕉️ஓம் முருகா #முருக பெருமான் 🙏🙏🙏🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #