அன்புத்தோழன் ரா. அருண் எம்.பி.ஏ.,
672 views
தாம்பத்யம்... ஒரு முதியவர் தட்டுத் தடுமாறியபடி தெருவில் நடந்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரைப் பார்த்து டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்றுப் பார்த்தான். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. "என்னங்க ஆச்சு"னு கேட்டான். "வேகமாக வந்த ஆட்டோ சக்கரம் காலுல ஏறிடுச்சு தம்பி" என்றார். "வாங்க... எனக்குத் தெரிந்த டாக்டர் பக்கத்துல தான் இருக்கார், கட்டுப் போட்டு மொதல்ல ரத்தம் கசியறதை நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்சனும் போட்டுக்கலாம்!" என்றான். வேண்டாம் என்று மறுத்தவரை விடாப்பிடியாக அழைத்துச் சென்றான் அவன். எல்லாம் முடியவும்.... "மணி என்ன தம்பி.... நேரமாயிடுச்சே.. நேரமாயிடுச்சே...!" என்றுப் பறந்தார் பெரியவர். "அப்படி என்னங்க அவசரம்..?! "என்றான். "என் பெண்டாட்டி பசியோட வீட்டில இருக்கா. அவளுக்கு இட்லி வாங்கிட்டு போகணும்..!" என்றார். "என்ன பெரியவரே... உங்க காலுல அடிப்பட்டிருக்கு... இப்ப இட்லியா முக்கியம்...?! லேட்டா போன தான் என்ன... திட்டுவாங்களா...?!" என்று சீண்டினான். அதற்கு அவர் "அவ அஞ்சு வருஷமா மனநிலை பாதிச்சு நினைவில்லாமல் இருக்கா தம்பி. எல்லா ஞாபகமும் போயிடுச்சி! நான் யார்னு கூட அவளுக்குத் தெரியாது...!" என்றார். அதற்கு அவன் "அப்படிப்பட்டவங்க உங்களை ஏன் லேட்டுன்னு எப்படி கேட்பாங்க...? அவங்களுக்குத் தான் உங்களை யாரென்றே தெரியாதே! கவலைப்படாதீங்க" என்றான். அதற்கு அந்த முதியவர் புன்னகைத்தபடியே சொன்னார் "ஆனால் அவ யாருன்னு எனக்குத் தெரியுமே தம்பி..!" #MoralStory #MoralStorytime #husband #wifeylife #wifeyforlife #story #storytime #StorytellingMagic #husbandandwifelife √ #wife #husband #The moral stories tamil #story #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்