ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.3K views
2 months ago
தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது பிக்பாஸ் 9. இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தினந்தோறும் சண்டையும் சச்சரவுமுமாக நடந்து வருகிறது. இதிலிருந்து, வாரா வாரம் ஒவ்வொரு போட்டியாளராக எவிக்ட் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வாரம் எவிக்ட் ஆன போட்டியாளர்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில், சில சமயங்களில் டபுள் எவிக்ஷனும் நடப்பதுண்டு. அப்படி, இந்த வாரமும் இருவர் இப்போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே, ரசிகர்களால் முக்கிய போட்டியாளர்கள் என்று கருதப்பட்டவர்கள்தான். ஒருவர், சண்டை போட்டு கண்டெண்ட் கொடுத்தார், இன்னொருவ் லவ் கண்டெண்டாக கொடுத்துக்கொண்டிருப்பார். சமீபத்தில் எதுவுமே செய்வதில்லை என்று விஜய் சேதுபதியிடம் திட்டும் வாங்கினார். யார் அவர்கள்? அந்த போட்டியாளர்கள் வேறு யாருமில்லை, துஷாரும் பிரவீன் ராஜ்தேவும்தான் என்று கூறப்படுகிறது. சீரியல் நடிகராக பிரவீன் ராஜ்தேவ், வந்த நாளில் இருந்தே வீட்டு போட்டியாளர்களிடம் முரட்டுத்தனமான பேச்சாலும் செயலாளும் திட்டு வாங்கி வந்தார். இவரை பார்த்த மக்களுக்கும் இவரது செய்கைகள் சிலவற்றை பார்க்க பிடிக்கவில்லை. இதைத்தாண்டி, சண்டை போடும் நேரத்தை தவிர பிற நேரங்களில் இவரது வாய்ஸ் வெளியிலேயே வரவில்லை என்ற கருத்தும் நிலவி வந்தது. இந்த வாரம் நாமினேட் ஆன இவர், இப்போது இந்த வார்த்தில் முதல் ஆளாக எவிக்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துஷார்: பிக்பாஸ் 9 இல்லத்திற்குள் செல்வதற்கு முன்பு, பலரால் இணையதள பிரபலமாகவும், 'தமிழ் பேசும் கொரியன் பையன்' ஆகவும் அறிமுகமானவர் துஷார். இந்த வீட்டிற்குள் சென்ற நாளில் இருந்து, சக போட்டியாளர் அரோராவுடன் ஒன்றாக சுற்றிக்கொண்டிருந்த இவர், அவ்வப்போது லவ் கண்டெண்டும் கொடுத்து வந்தார். இடையில் இது பிரச்சனையை கிளப்பியதால், அரோராவை விட்டு தள்ளியே இருந்தார். கடந்த இரு வாரங்களாக, துஷாரும் அரோராவும் பிக்பாஸ் வீட்டில் சும்மாவே இருப்பதாக கூறப்பட்டது. இதனை கடந்த வாரம் விஜய் சேதுபதி விமர்சிக்கவும் செய்தார். இப்போது, மக்கள் மத்தியில் குறைவாக வாக்குகளை பெற்று அவர் வீட்டை விட்டு எவிக்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பொருத்திருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில்தான் பார்க்க வேண்டும். #😨BB9: பிக்பாஸில் இன்று டபுள் எவிக்சன்🚫