ல.செந்தில் ராஜ்
9.6K views
1 months ago
நித்தமுன்னைப் பார்த்தாலும் சலிக்கவில்லை உன் நினைவின்றி என் நெஞ்சில் எதுவுமில்லை சென்னமுதம் வீசுகின்ற அழகு முல்லை ஷண்முகத்தை நம்பிவிட்டால் தோல்வி இல்லை ஓம் முருகா🙏 ஓம் சரவணபவ🙏 முருகா நீயே அனைத்தும்❤️ 🦚🐓💚🥀🌹🙏 #🕉️ஓம் முருகா #murugan #Muruga #thiruchentur murug an #முருகன் ஸ்ரீ கந்த குரு கவசம். நன்கறிந்து கொண்டேன் நானும் உனது அருளால் விட்டிட மாட்டேன் கந்தா வீடதருள்வீரே நடு நெற்றி தானத்து நான் உன்னை தியானிப்பேன் பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய் கழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய் சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ஆசை அறுத்து அரனடியை காட்டிவிடும் மெய்யராக்கி மெய் வீட்டில் இருத்தி விடும் கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்த குரோ கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ மருதமலை சித்தன் மகிழ்ந்து பணி பரமகுரோ சென்னிமலை குமரா சித்தர்க் கருள்வோனே சிவவாக்கிய சித்தருனை சிவன்மலையில் போற்றுவரே பழனியில் போகருமே பாரோர் வாழ பிரதிஷ்டி த்தான் புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குரு நாதா கள்ளம் கபடற்ற வெள்ளையுள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னை களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்தி ருந்தும் கந்தகுரு உள்ள இடம் ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன். ஓம் சரவணபவ.