Kumar
708 views
2 months ago
தொன் போஸ்கோ கல்வி மற்றம் சமூதாய மாற்றத்திற்கான நிறுவனம் திருப்பூர் மாநகரில் 26 ஆண்டுகாளாக மேலாக சிறந்த தொழிற்பயிற்சி மாணவ மாணவியருக்கு கொடுத்து வருகிறது. எங்களது நிறுவனம் பள்ளி இடைவிலகல் ஆகும் மாணவ மாணவியர், பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைவோர் மற்றும் வேலையின்றி சுற்றி திரியும் இளைஞர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங், தையல் பயிற்சி, ஆயத்த ஆடை பயிற்சி கம்யூட்டர் இலவசமாக அளிப்பதோடு அவர்களுக்கு வேலையும் தேடித் தந்து எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துக்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தோருக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து மீண்டும் தேர்வில் வெற்றி பெற வழிவகுக்குகிறது. தேசிய திறன் மேம்பாட்டு கழகம் NSDC –Skill India சான்றிதழுடன் கட்டணமில்லா தொழிற்ப் பயிற்சி நடத்தப்படுகின்றது. இதன் மூலம் பயனடைந்தோரின் எண்ணிக்கை ஏராளம். தொன் போஸ்கோ நெஸ்ட் நல்லூர், திருப்பூர் #திறன் வளர் பயிற்சி