-
998 views
5 months ago
வரலாற்றில் என்றும் மறக்க முடியாத நினைவுகள் 18 ஆகஸ்ட் 1945 ம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்து விட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. அவருடைய மரணம் மர்மமாகவே இன்னும்கூட தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1967-ல், நேதாஜி மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார். #சுபாஷ் சந்திர போஸ்