Tamil Newspaper
417 views
16 days ago
#😊எனது முதல் பதிவு🤙🏼 48 மணி நேரத்தில் 2 லட்சம் பேர்! சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்! பதற்றத்தில் வாரியம்! சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியப் பேரிடர் மீட்புப்படை விரைந்துள்ளது. ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல மகர விளக்கு உற்சவ காலத்தை ஒட்டி நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதால், நெரிசலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பம்பையில் பக்தர்கள் கூட்டத்தை குறைக்கவும், பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த தேவஸ்வம் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக தேசியப் பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் சபரிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி, அரக்கோணத்திலிருந்து 60 பேர் கொண்ட இரண்டு பேரிடர் மீட்புக் குழுவினர் தேவையான உபகரணங்களுடன் சபரிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள்