ஒரு நபர் கடன்பட்டால் நிலை எவ்வாறு இருக்கும் தெரியுமா?
சுயதொழில் செய்ய ஆசைபட்டு எப்படியும் முன்னேறிவிடுவோம் என இறைவனின் மீது நம்பிக்கை வைத்து பழகிய சகோதர்களிடம் கடன்வாங்கி தொழிலை ஆரம்பித்து தொழிலில் தோல்வி பெருத்த நஷ்டம் அதன் விளைவு இதோ............
1. ஒருநாளைக்கு ஆயிரம் போன் வரும் அத்தனை அழைப்பையும் எடுத்து பேசவேண்டும் என்ன பதில் சொல்வது என விழிபிதுங்கி தயங்கி தொலைபேசிஅழைப்பை ஏற்காமல் இருப்பீர்கள் ஆனால் அலைப்பேசியை எடுக்கவில்லையென்றால் நீ அவர்களை ஏமாற்றுகிறாய் என்கிற பட்டம்
2. கடன்கொடுத்தவர்கள் போன் நமக்குவரும்போதொல்லாம் உள்ளம் ஒரு பதறு பதறுமே அந்த வலியை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது
3. அவர்களின் கடனை எப்படியாவது அடைக்கவேண்டும் என நாலுநபர்களிடம் கடன் கேட்டு இருப்பீர்கள் அவர்களிடத்திலும் உங்களை பற்றி சொல்லி இருப்பார்கள் நீ அவன்கிட்ட வாங்கியே தரவில்லையாம் என்கிட்ட எப்படி திருப்பி தருவ? என அவர்களின் பதில் எல்லாபக்கமும் சொல்லி முட்டுக்கட்டை போடுவார்கள் இருந்தாலும் உடனே கடனை அடைக்கவேண்டும் என தொடர்நச்சரிப்பு
4. நீ ஆயிரம் தடவ தொழுதாலும் நோன்பு வைத்தாலும் விளையாட்டுக்கூட இறைவனுக்கு இனைவைப்பான வார்த்தை கூறாமல் இருந்தாலும் உனக்கு நயவஞ்சகன் பட்டம் கிடைத்தே தீரும் அதுவும் நீ இஸ்லாத்தை ஏற்று இருந்தால் பணத்துக்காகதான் இஸ்லாத்தை நீ ஏற்றாய் என பழிச்சொல்லும் உனக்கு கிடைக்கும் கிடைத்துக்கொண்டே இருக்கும் கடனை அடைக்கும் வரை
5.ஒரு கட்டத்தில் இவர்களின் தொந்தரவு தாங்காமல் ஐமாத்திடம் சென்று கடனைஅடைக்க காலஅவகாசம் கேட்டால் பணம் கொடுத்தவர்களுக்குகே அதிக மரியாதை கடன் வாங்கிவிட்டேன் கடனை எப்படியாவது அடைக்கவேண்டும் என்கிற உன் இறையச்சத்திற்க்கும் நேர்மைக்கு எல்லாம் துளியளவு மரியாதை அங்கு இருக்காது கடன் கொடுத்தவர்களுக்கோ மரியாதை காரணம் கடன் கொடுத்தவர்கள் தான் அவர்களுக்கு நல்லவர்கள் கன்னியமானவர்கள்
6. ஸலாமுக்கு பதில் சொல்லமாட்டார்கள் ஸலாமும் சொல்லமாட்டார்கள் வாட்ஸ்அப்பில் ஒரே கேள்விதான் பணம் எப்ப கிடைக்கும்? இதை தவிர வேறு எந்த கேள்வியும் இல்லை
7. இஸ்லாத்தில் கடன் மோசமானது அதை அடைக்கவில்லையெனில் உனக்கு ஜனாஸா தொழுகை கிடையாது என ஆயிரம் ஹதீஸ் வரும் திருப்பி நீங்கள் கடன் பட்டவர்களுக்கு காலஅவகாசம் கொடுங்கள் அல்லது கடனை தர்மமாக விட்டுவிடுங்கள் நீங்கள் அறிந்துக்கொண்டால் அதுவே உங்களுக்கு நன்மை என குர்ஆன் வசனத்தை சொன்னால் வாங்குன காசுகொடுக்கவக்கில்லை இஸ்லாம் பேசுற என நீங்கள் அவமானபடுத்த படுவீர்கள்
8. கடன் கொடுத்தவர்கள் தொடர் நச்சரிப்பு தாங்கமல் தற்கொலை எண்ணம் உங்களுக்கு சிலநேரங்களில் தோன்றும் தோன்றும்போதெல்லாம் உங்கள் மனைவி குழந்தைகளை நினைத்து நினைத்து மனதை தேற்றிக்கொள்வீர்கள்
9. லாயிஇலாஹ இல்லாஹ்என்ற கலிமாவை முன்மொழிந்து இஸ்லாததை ஏற்று நான் ஓர் முஸ்லிம்எனக்கு இஸ்லாமிய சமூகம் இருக்கிறது என நம்பி வந்துஇருப்பீர்கள் இவர்கள் தங்களை புரிந்துக்கொள்ளாமல் படுத்தும் பாடு சொல்லிமாளது உயிரை பறிக்கும் வலியை தருவார்கள் எங்களுடைய நபி ஸல் காலத்தில் நாங்கள் பிறந்திருக்ககூடாதா? நபித்தோழர்கள் போன்று தோழர்கள் நமக்கு அமையகூடாதா? என ஒவ்வாரு நாளும் ஏங்கி தவீப்பீர்கள்
10. ஆக மொத்தம் ஆறுதல் மட்டுமே சுலபமாக கிடைக்கும் தீர்வை நாம் தான் தேடவேண்டும் ஏனெனில் கலிமாவை முன்மொழிந்து ஏக இறைவனை ஏற்ற அனாதை நான் திக்கற்று நிற்கின்ற துருதிஷ்டசாலி நான் மரணம் மட்டுமே எனக்கான விடுதலை ..........
இப்படிக்கு..... உங்களில் ஒருவன்
#யா அல்லாஹ்