பரிகார பலன் பற்றிய புரிதல்...
ஒரு ஜாதகருக்கு தோஷ நிவர்த்திக்காக பரிகாரம் சொன்னால் அந்த ஜாதகருக்கு ஐந்தாம் இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஒன்பதாம் இடமாகிய பாக்கிய ஸ்தானமும் பலவீனமாக இருக்கக்கூடாது.முக்கியமாக ராகு-கேதுக்கள் 5/9 ஆம் இடங்களில் இருக்கக்கூடாது.ஐந்து மற்றும் ஒன்பதாம் இடங்கள் பலமிழந்த ஜாதகருக்கு பரிகாரம் சொன்னால் பலனளிக்காது.மேற்சொன்ன அமைப்பில் உள்ள ஜாதகருக்கு எப்போது பரிகாரம் சொல்லவேண்டுமென்றால் கோச்சார குரு லக்னத்தையோ, லக்னாதிபதியையோ,இராசியையோ அல்லது எந்த கிரகத்திற்காக பரிகாரம் செய்கிறோமா அந்த கிரகத்தோடு தொடர்புகொள்ளும் காலத்தில் ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்தால்தான் பலன் அளிக்கும்.அல்லது பிரசன்னம் பார்த்து பரிகாரம் செய்யலாம்.பரிகாரம் செய்வதற்கு கர்மாவின் துணையும் ஆதரவும் நிச்சயம் வேண்டும்.அப்போதுதான் பரிகாரம் பலிதமாகும்.அதேபோல் 5/9ஆம் இடங்கள் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தாலும் ராகு/கேது மற்றும் பாதகாதிபதி தசா புத்தி நடப்பில் இருந்தால் மேற்சொன்ன காலகட்டத்தில்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.பரிகாரம் செய்வதற்கு முந்தைய நாள் குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம்.ஏனென்றால் எந்தப் பரிகாரம் செய்தாலும் அந்தப் பரிகாரம் பலனளிக்க குலதெய்வ அனுக்கிரகம் நிச்சயம் வேண்டும் நண்பர்களே...
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்
குறிப்பு:
அடியேனின் ஜோதிட அனுபவ ஆய்வுக்கட்டுரைப்பதிவுகளை தொடர்ந்து பார்வையிட கீழே உள்ள லிங்கில் சென்று குழுவில் இணைந்து கொள்ளவும் நண்பர்களே.
Facebook link:
https://www.facebook.com/groups/4141332219242280/?ref=share
#ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்
Page link:
https://www.facebook.com/sriselvanayakiammanastro/
Instagram link:
https://instagram.com/astro_sri_selvanayagi_amman
Subscribe to youtube link:
https://youtube.com/channel/UCVLM0NuIJeGCv5Lk-EIGUSw
உங்களின் தனிப்பட்ட சுயஜாதகத்தை கட்டண முறையில் ஆய்வு செய்ய விரும்பினால் 9842757275 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
தயவுசெய்து கமெண்ட்டில் ஜாதகத்தை பதிவிட்டு பலன் கேட்காதீர்கள்.சந்தேகங்கள் ஆலோசனைகளுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளவும்.கமெண்டில் அனைவருக்கும் பதில் அளிக்க நேரம் ஒதுக்க முடிவதில்லை...
நன்றி