*"தலைவர் வாழப்பாடி யாருக்கு புகழ் அஞ்சலி"*
*எங்கே காங்கிரஸ், ஏது காங்கிரஸ், என்று ஏளனம் பேசியவர்களுக்கு "இதுதாண்டா காங்கிரஸ்" என்று காட்டியவர்,*
*ஒரு சாமானியனாக விவசாயின் மகனாக வாழப்பாடியில் பிறந்து, தனது கல்லூரி பருவத்தில் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு பெருந்தலைவர் காமராஜர், பெரியார்,E.V.K சம்பத், தலைவர் M.P.S, அவர்களால் அடையாளம் கண்டு மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், தொழிலாளர்களின் தலைவர் என்ற பரிமாணத்தில் வளர்ந்து தன்னுடைய இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினராகி,(1977) காமராஜரின் பள்ளியில் அரசியல் படித்து அன்னை இந்திராவின் யுகத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகி, தலைவர் ராஜீவ் காந்தியின் அன்பை பெற்று, INTUC, தோட்டத் தொழிலாளர்களின் தலைவர், ILO உலக தொழிலாளர் அமைப்பின் தலைவர், ஜப்பான், சைனா, இத்தாலி (ஜெனிவா), போன்ற நாடுகள் அவருக்கு கௌரவ குடியுரிமை கொடுத்து கௌரவப்படுத்தியது*
*1989 ஆம் ஆண்டு தலைவர் ராஜீவ் காந்தியால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்"*காங்கிரஸ் தொண்டர்கள், INTUC தொழிலாளர் படையுடன் சத்தியமூர்த்தி பவனில் தலைவராக பதவி ஏற்றார். காங்கிரஸ் பூஸ்வாக்களிடமிருந்து சாமானியர்களுக்கு கை மாறியது*.
*ஏன் இதை கூறுகிறேன் என்றால், தலைவர் இளையபெருமாள், M.P. சுப்பிரமணியம்,அன்னை மரகதம் சந்திரசேகர் அவர்கள் நேரு, இந்திரா காந்தி, குடும்பத்திற்கு மிகவும் நெருங்கியவராக இருப்பினும் சத்தியமூர்த்தி பவன்,- காமராஜர் பவனுக்குள்ளும் அனுமதிக்கப்படவில்லை*
*(Non allide movement) அணிசேரா நாடுகள் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் கொள்கையை வகுத்து இஸ்ரேல் அதிபர் "யாசர் அராபத்" அவர்களை அழைத்து அன்னை இந்திரா காந்தி முன் புத்தகத்தை வெளியிட்டவர்*.
*அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால் விட்ட, யாரும் நெருங்க முடியாத இடத்தில் இருந்த அதிபர் "சதாம் உசேனை" நேரில் சந்தித்தவர்*.
*பல்வேறு அரசியல் காரணங்களால் பூசுவாக்கள் மத்தியில் ஒரு சாமானியன் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், அமைச்சராக முடியாத நிலையில் இருந்து 1991 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சரானார், 21 நாளில் காவிரி நீர் பிரச்சனைக்காக தனது பதவியை தூக்கி எரிந்து "காவேரி நாயகனாக உருவெடுத்தார்"தமிழக காங்கிரஸில் ,6 ஆண்டு காலம் தொடர்ந்து தலைவராக இருந்து வரலாறு படைத்தவர்*,
*தமிழக காங்கிரஸில் காமராஜரை சொந்தம் கொண்டாடியவர்கள் மத்தியில் பாராளுமன்றத்தில் கர்மவீரர் காமராஜர் சிலையை நிறுவியவர்*.
*காமராஜர் ரயில் (மறைமலைநகர்) நிலையம் பெயருக்காக போராடி தமிழக காங்கிரஸ் தொண்டர்களை தட்டி எழுப்பி 50000 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்களை கொண்டு, சிறை நிரப்பி திராவிடக் கட்சிகளை அதிரசெய்தவர்.*
*சென்னை சட்டக் கல்லூரியில் காமராஜர் பெயரில் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க வைப்புத் தொகையை ஏற்படுத்திக் கொடுத்தவர்*.
*விடுதலைக்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைவதற்கு காமராஜருக்கு, உறுதுணையாக இருந்த,பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக விளங்கிய, திரு,S.S.ராமசாமி படையாட்சியார் சிலை அமைப்பதற்கு காரணமாய் இருந்தவர்*
*தனது வாழ்நாள் முழுவதும் ஏழை மாணவர்கள் படிப்பிற்காகவும், இதய அறுவை சிகிச்சைக்காகவும், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களுக்கு நிதி உதவி அளித்தவர்,*
*தான் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு எட்டாத கனியாக இருந்த கேஸ் இணைப்பை எல்லோரும் பயன்படுத்த தாராளமயமாக்கினார்*.
*மின்சார வாரியத்தில் பணி நிரந்தரம் இல்லாத தொழிலாளர்களுக்காக நீதிமன்றம் சென்று போராடி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி நியமனம் பெற்று தந்தவர்*
*இவர் வாழ்நாளில் காங்கிரசை அரியணை ஏற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார் அவரின் கனவுகளை நனவாக்க சபதம் ஏற்போம்.*
*அனைவரும் வருக*
*நீங்கா நினைவுடன்*
#சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம்முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #சுப்புராம் முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்குமாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் காங்கிரஸ்