🥢🥢நாளை 08.08.2025 வரலட்சுமி விரதம் 🥢🥢
எந்த தெய்வத்தை நோக்கி நாம் விரதமிருக்கின்றோமோ, அந்த தெய்வத்தாலேயே இந்த பூமியில் உள்ளவர்களுக்கு சொல்லப்பட்ட விரதம் தான் வரலட்சுமி விரதம்.
பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக் கூடிய லட்சுமிதேவியை நினைத்து இருப்பது வரலட்சுமி விரதம். பெளர்ணமிக்கு முன் வரக் கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுவது வரலட்சுமி விரதமாகும்.
மங்களத்தையும், மாங்கல்ய பலத்தையும் அளிக்கக் கூடிய விரதம் வரலட்சுமி விரதம். பெண்கள் இருக்கும் முக்கியமான விரதம் வரலக்ஷ்மி விரதம் ஆகும். சில பண்டிகைகளையும், விரதங்களையும் கோவிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே கொண்டாடுவோம். அப்படி பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகைதான் வரலட்சுமி விரதம்.
இந்த வருடத்திற்கான வரலட்சுமி விரதம் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து மலர்களால் பூஜை அறையை அலங்கரித்து மகாலட்சுமியை நினைத்து விரதம் இருந்து கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்க நோன்புக்கயிறு கட்டி வணங்குவார்கள்.
புராண கதை:
செளராஸ்டிரா தேசத்தை சேர்ந்த சுசந்திரா என்ற மகாராணி இருந்தார். பணத்தில் திழைத்ததால் பொன், பொருளை மதிக்காமல் இருந்தார். அவருக்கு சாருமதி என்ற பெண் இருந்தார். தாய், தந்தையரால் மிக சிறப்பாக வளர்த்து நல்ல குடும்பத்தில் மணமுடித்தனர்
மாமனார், மாமியார் மீது மரியாதை, பக்தியோ டும்,கணவர் மீது அன்பு, பறிவோடும், புகுந்த வீட்டு சொந்தங்களை மதித்து, மரியாதை செய்யக்கூடிய மிகச் சிறந்த, ஒரு குடும்ப பெண்ணாக திகழ்ந்தார்.
மகாலட்சுமி வியந்து மகிழ்ந்து சாருமதிக்கு கனவில் தோன்றி சொன்ன ஒரு விரதம் தான் இந்த வரலட்சுமி விரதம். அப்படி இந்த நாளில் வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கும் வீட்டில் நான் பூரணமாக, தங்குவேன். என் அருள் பூரணமாக கிடைக்கும் என கூறியுள்ளார்.
அப்படி அம்பிகையே கூறிய விரதம் என்பதால், அது எவ்வளவு பெரிய சிறந்த விரதமாக இருக் கும் என உணர வேண்டும். மற்ற விரதத்தை விட மிகச்சிறந்த விரதமாக பார்க்கப்படுவதால் கட்டாயம் கடைப்பிடிப்பது நல்லது.
குறிப்பிட்ட நாளில் வரலட்சுமி விரதம் மேற் கொள்ள இயலாதவர்கள் எப்போது விரதம் இருக்கலாம்?
சில பெண்கள் உடல் பிரச்னை காரணமாக இந்த வரலட்சுமி விரதத்தை வரும் வெள்ளிக் கிழமை கடைப்பிடிக்க முடியாவிட்டால், அடுத்து வரும் வெள்ளியன்று கடைப்பிடிக்கலாம்.
அப்போதும் கடைப்பிடிக்க முடியாத சூழல் நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமை தினத்தில் இந்த விரதத்தை மேற் கொண்டால் மகாலட்சுமியின் அருள் அப்போதும் பரிபூரணமாக கிடைக்கும்.
சுமங்கலி பெண்கள், மகாலட்சுமிக்கு செய்யும் சிறப்பான வழிபாட்டு பூஜை இந்த வரலட்சுமி விரதம் ஆகும்.
விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்றும், லட்சுமம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு தான் எங்கும் வியாபித்திருப்பதை உணர்த்தும் வகையில் உலகில் உள்ள அனைத்து அழகுக ளையும் ஒன்றாக ஒருங்கிணைத்து உருவா க்கிய அடையாளம் தான் மகாலட்சுமி.
வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது. சுமங்கலிகள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்பம் தலைத்தோங்கும். கன்னிப்பெண்கள் மேற் கொள்வதால் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர்.
🌹வரலட்சுமி விரதம் கடைப்பிடிகும் முறை:
வீடு அல்லது அலுவலகத்தில் தென் கிழக்கு மூலையில் சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் அம்மன் முகம் எழுப்ப வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைத்து வணங்கலாம். சிலையை தாழம்பூ வால் அலங்கரித்து பின் அதை ஒரு பலகை மீது வைக்கவும்.
பின் சிலை முன் ஒரு வாழையிலை போட்டு, ஒரு படி பச்சரிசி பரப்பி, மாவிலை, தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்கள் வைத்து, சிலை க்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.
ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிரப்பி (புனித நீர் இல்லாவிட்டால் தூய நீரை வைக்கலாம்), மாவிலையுடன் தேங்காயை, அரிசின் நடுவில் வைக்க வேண்டும்.
பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டு வைத்து சுவாமியை பூஜை செய்ய வேண்டும்.
கும்ப பூஜைக்கு பின் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடி த்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம்.
பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆகியவற்றை படிக்கலாம்.
வரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுக்க வேண்டும். நெய்வேத்தியமாக கொழுகட்டை படைக்கலாம்.
பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதன் மூலம் அன்னபூரணியின் அருள் நமக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
சந்தனத்தால் செய்யப்பட்ட அம்மனின் சிலை யை மறுநாள் நீர் நிலைகளில் கரைத்துவிட வேண்டும்.
🌹சடங்குகள்:
கட்டாயப்படுத்தி விரதத்தை யாரும் இருக்க சொல்லக் கூடாது. மாமியாருக்கு இந்த விரதம் இருந்தால், மருமகள் கடைப்பிடிக்கலாம். அம்மா இருந்தால் மகள் விரதம் இருக்கலாம்.
அப்படி இதுவரை வரலட்சுமி விரதம் இருந்ததி ல்லை என்றாலும், விரதம் இருக்க விரும்பும் பெண்கள் தாராளமாக விரதம் இருக்கலாம்.
🌹வரலட்சுமி பூஜை செய்வதற்கான நல்ல நேரம்:
வெள்ளிக் கிழமையில் பொதுவாக காலை 9.15 - 10.15 வரையிலும், மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது. இந்த நேரத்தி ல் வரலட்சுமி பூஜை செய்ய சிறந்த நேரம். அப்படி இல்லை என்றால், பொதுவாக வீட்டில் விளக்கேற்றும் அந்தி சாயும் நேரத்தில் பூஜை செய்வது நல்லது.
"தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி!
தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி!
தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி!
தாமரைக் கண்ணான் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி!
தாமரை போல வந்த தவமுனி தேவர்க் கெல்லாம்,
தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி!
தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி!
தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி! போற்றி!.."
ஸ்ரீமஹாலட்சுமி தாயே திருவடி மலரடி சரணம்..🙏🙏🙏
#வரலக்ஷ்மி நோன்பு வாழ்த்துக்கள் 🙏 #🙏🏻வரலக்ஷ்மி பூஜை 🙏🏻 #வரலக்ஷ்மி #வரலக்ஷ்மி விரத பூஜை #வரலக்ஷ்மி விரதம்