பாகிஸ்தானில் மேக வெடிப்பிற்கு 154 பேர் பலி: ஏராளமானோர் மாயம்
பெஷாவர்: பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் பலியானார்கள்.
பலர் மாயமாகியுள்ளனர். பாகிஸ்தானின் மலை பாங்கான கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வட மேற்கு பஜாவுர் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன.
#💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥#📢ஆகஸ்ட் 16 முக்கிய தகவல்🤗#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️#📺வைரல் தகவல்🤩#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்