Cholan News
2K views
6 months ago
#🛑 பிரபல பாடகருக்கு தடை விதித்த அரசு! #📢 ஜூலை 3 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ அமெரிக்காவைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் கன்யா வெஸ்ட் ஆஸ்திரேலியாவில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராப் இசைக் கலைஞரான கன்யா வெஸ்ட் சமீபத்தில் அடோல்ஃப் ஹிட்லரை ஆதரித்து ’ஹெய்ல் ஹிட்லர்’ என்ற பாடலை வெளியிட்டார் இந்தப் பாடலில் யூத மக்கள் மீது வெறுப்பைப் பரப்புவது போலும் ஹிட்லருக்கு ஆதரவாகவும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளதால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின இதனையொட்டி பல்வேறு ஸ்டீரிமிங் தளங்களில் இந்தப் பாடல் தடைசெய்யப்பட்டது சமீபத்தில் தன்னை நாஜியாக அடையாளப்படுத்திக் கொண்ட கன்யா வெஸ்ட் ஆஸி.நாட்டைச் சேர்ந்த டிசைனர் பியான்கா சென்சோரியை திருமணம் செய்துள்ளார் இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் டோனி புர்க், “யூத மக்களின் மீதான வெறுப்பை யாராவது பகுத்தறிவான செயல் எனக் கூறினால் அவர்களை எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டேன் கன்யா வெஸ்ட் ஆஸி.க்கு நீண்ட காலமாக வந்திருக்கிறார். பல அவதூறான கருத்துகளை இதற்கு முன்பும் தெரிவித்துள்ளார்.தற்போது, ஹிட்லருக்கு ஆதரவாக பாடலை வெளியிட்டுள்ளதால் அவருக்கு ஆஸி.யில் நுழைய விசா மறுக்கப்டுகிறது” எனக் கூறியுள்ளார் ராப் பாடகர் கன்யா வெஸ்ட்டுக்கு இது நிரந்தர தடையா அல்லது தற்காலிகமானதா எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை அவதூறு கருத்துகளால் கடந்த 2022-இல் அடிடாஸ் நிறுவனம் இவருடனான ஒப்பந்தத்தை நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.