💞 தொழுகையில் இரண்டு ஸஜ்தாவிற்கு இடையே ஓத வேண்டிய அழகிய துஆ 💞
• பொதுவாக தொழுகையில் இரண்டு ஸஜ்தாவிற்கு இடையே நபி (ஸல்) அவர்கள் துஆ ஓதி உள்ளார்கள்! ஹதீஸ்களில் இரண்டு துஆக்கள் இடம்பெற்று உள்ளது இதில் ஏதேனும் ஒன்றை நாம் ஓதி கொள்ளலாம்!
• ஒரு ஸஜ்தா செய்து விட்டு அடுத்த ஸஜ்தா செய்வதற்கு முன்பு இதில் உள்ள ஏதேனும் ஒரு துஆவை ஓதி விட்டு பின்பு அடுத்த ஸஜ்தா செய்யவேண்டும்!
1)
رَبِّ اغْفِرْ لِي رَبِّ اغْفِرْ لِي
‘ ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ ’
பொருள் : இறைவா! என்னை மன்னித்து விடு! இறைவா! என்னை மன்னித்து விடு!
(நூல் : சுனன் நஸயீ : 1145)
2)
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
‘ அல்லாஹும்ம ஃபிர்லீ வர்ஹம்னீ, வஆஃபினி வஹ்தினீ, வர்ஸுக்னீ ’
பொருள்: யா அல்லாஹ்! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எனக்கு நீ அருள் செய்வாயாக ! எனக்கு நீ உடல் நலத்தை தருவாயாக! நீ எனக்கு நேர்வழி காட்டுவாயாக ! எனக்கு நீ வாழ்வாதராம் வழங்குவாயாக!
(நூல் : திர்மிதி : 284 | சுனன் அபூதாவுத் : 850)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!
(நூல் : ஸஹீஹ் புகாரி : 631)💖 #யா அல்லாஹ்