அஜீத்குமாருகு ஏற்பட்ட காயங்களின் பட்டியலை கவனியுங்கள்.
இது போல மிருகத்தனமாக அடித்து காயம் ஏற்படுத்த பெற்றோர்கள் கற்றுத் தருவதில்லை,
நண்பர்கள் கற்றுத் தருவதில்லை, உறவினர்கள் கற்றுத்தருவதில்லை,
பள்ளிக்கூடமோ- ஆசிரியர்களோ கற்றுத் தருவதில்லை, கல்லூரி நட்புகளோ-கராத்தே மாஸ்டரோ கூட கற்றுத் தருவதில்லை.
யார் இந்த கொடூரமான தாக்குதலை, தாக்குகின்ற மனநிலையை பயிற்சியளித்திருக்க முடியும்? அதுவும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாக இருக்க முடியும்?
நிராயுதபாணியான, வலியால் துடிக்கிற, அப்பாவியான தனி மனிதனை மரணம் உருவாகும்வகையில் கொடூரமாக தாக்கும் பயிற்சியை கற்றுத்தரும் ஒரு நிறுவனம் எப்படி மக்களுக்கானதாக இருக்க முடியும்?
பெற்றோர்-நண்பர்களுடன் அன்பாய், அரவணைப்புடன் வளர்ந்த இளைஞர்களை வன்முறை வெறியர்களாக மாற்றும் காவல்துறை எனும் அமைப்பு எவ்வாறு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும்? இந்த காவல்துறை நிறுவனம் சனநாயகத்திற்கானதா?
170 ஆண்டுக்கு முன்வரை காவல்துறை என எதுவுமில்லாமல் வாழ்ந்தது தமிழினம்.
வெள்ளையன் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட கட்டமைப்பை எத்தனைக்காலம் கட்டிகாப்பது? இந்திய அரசில் முதலாளிகளின், அதிகாரமிக்கவர்களின், உயர்சாதிகளின் நலனுக்காக பாதுகாக்கப்படும் வெள்ளையர் உருவாக்கிய காவல்துறை நமக்கானதா என சிந்திப்பது நல்லது.
கருப்பர்களுக்கு எதிரான போலீஸ் வன்முறையை கண்டித்து அமெரிக்காவில் எழுந்த போராட்டத்தில் பல மாகாணங்களில் 'காவல்துறை'யை கலைத்திட மாநகர நிர்வாகங்கள் தீர்மானம் போட்டன.
நமக்கு தேவை நிரந்தரத் தீர்வு.
அஜீத்குமாருக்கு நிகழ்ந்தது மற்றவர்களுக்கு நிகழாது என்பதற்கான உத்திரவாதம் தரும் சட்டரீதியான நடவடிக்கைகளும், கடந்த 10-15 ஆண்டுகால காவல்நிலைய/காவல்துறை கொலைகளுக்கான பொறுப்பேற்றலுடனும் இல்லாமல் இந்த துயர நிகழ்வு முடித்து வைக்கப்படுகிறது.
மீண்டும் நினைவில் கொள்வோம், இதுதனிப்பட்ட நிகழ்வல்ல. வன்முறை நிறுவனத்தின் தொடரும் அடக்குமுறை.
உலகளவில் இந்திய அரசு மட்டுமே 'ஐ.நாவின் அரச-சித்தரவதைகளுக்கு எதிரான சாசனத்தை ஏற்காத மாபெரும் சனநாயக நாடு!'
#இந்தியப் பார்ப்பனியம் #காவல்துறை #மனித உரிமை மீறல் #தமிழ்த்தேசியம் #தோழர் திருமுருகன் காந்தி