பல பேரறிவு கொண்ட மாணவர்கள் மனதில்
நம்பிக்கை நாயகனாய் இவர் முகம் மட்டுமே….
சூலை மூவைந்தில் விருதுபட்டியில் எளியோனாய்
சிவகாமி மைந்தனாய் மண்ணில் அவதரித்தாய் .!
அபிராமி அந்தாதியாய்
அகிலமெங்கும்
ஒளியானாய் .!
காமாட்சியாய் குலமான குலசாமியும் நீயே !
காமராசாய் வளமான
ராசாவும் நீயே !
கம்பிக்குள் வாழ்ந்த கம்பீரமும் நீயே !
குலக்கல்வி ஒழித்து நலக்கல்வி தந்தாய் .!
இலவசக்கல்விஅளித்து நல்லுணவை ஈந்தாய் .!
கல்வி ஒளிவிளக்கு உன்னாலே ஒளிர்ந்தது ...
கல்லாமை அறியாமை
தன்னாலே அகன்றது ...
எதிர்த்தோரை
ஏணியாக்கிய கலிங்கத்துப்பரணி
நீயே !
கீழோரை
மேலோராக்கிய பெரியபுராணமும் நீயே !
திட்டங்கள் தீட்டுவதில் எந்நாளும் பிதாமகன் ..
துயரங்கள் நீக்குவதில் எப்பொழுதும் உழவன் மகன் ..
நீர்ப்பாசனத் திட்டத்தால் கண்ணீர் அருகியது ...
மின்சாரத்திட்டங்களால் இருளும் நீங்கியதே .!
உழவாரப் பணிகளால் வேளாண்மையும் ஓங்கியதே .!
அணைகளைப்பெருக்கி உழவினை அரவணைத்தாய் ..
தடைகளைத் தகர்த்துச் சட்டங்களை வகுத்தாய் ..
வாய்க்காலுக்கு வாயிருந்தால்
நாளெல்லாம் புகழ்பாடும் ...
ஒளிரும் வெற்றியில் மயங்காது நின் கதராடை
தோல்வியில் கலங்காது நின்
மனவோடை ..
உதவியைக்
கருணையாக்கும் மக்களின் முதல்வர் ...
பதவியைத் துறந்து வழிகாட்டுவதிலும்
முதல்வர் ...
வறியோரின்
மனதினைப் படித்த படிக்காத மேதை !
புகழுக்கு மயங்காத கர்மவீரர் மனதளவில் குழந்தை !
உனதாட்சி ஏழைகளின் கண்ணாடி மனசாட்சி !
மறைந்தும் வாழ்கிறாய் அணையா விளக்காய் ...
படிக்கும் குழந்தையின் வாழ்க்கையில் ஒளிவிளக்காய் ...
மீண்டும் பிறவாயோ நானிலமும் பயனுறவே.......
#காமராஜர் பிறந்த தினம் இன்று ஜூலை 15 #கல்விதந்தை 📚