🚩 காலை தரிசனம் !
திருவிடைக்கழி முருகன் தரிசனம் !!*
"நிற்பதும் நடப்பதும்
நின் செயலாலே..!
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே..!
கற்பனை என்றாலும் நீ...கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்..!!"
இன்று துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் !
மங்களகரமான ஸ்ரீ்விசுவாவசு வருடம் :
ஆடி மாதம் 04 ஆம் நாள் !
ஜூலை மாதம் 20 ஆம் தேதி !
(20-07-2025 !
ஞாயிற்றுக்கிழமை !
இன்றைய திதி :தேய்பிறை : தசமி !
தசமி..
காலை 11-15 மணிவரை, அதன்பிறகு ஏகாதசி !
இன்றைய நட்சத்திரம் :
காரத்திகை !
கார்த்திகை....
இரவு 10-30 மணிவரை,அதன்பிறகு ரோகிணி !!
யோகம் :
சித்தயோகம் ! அமிர்தயோகம் !!
இன்று
கீழ் நோக்கு நாள் !!
சந்திராஷ்டமம் :
இன்று துலாம் ராசிக்குசந்திராஷ்டமம் !
ராகுகாலம் :
மாலை : 04-30 மணி முதல் 06-00 மணி வரை !!
எமகண்டம் :
மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!
குளிகை :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
சூலம் : மேற்கு !
பரிகாரம் : வெல்லம் !!
கரணம் :
காலை: 10-30 மணி முதல் 12-00 மணி வரை !
இன்றைய நல்ல நேரம் என்கின்ற சுப ஓரைகள் :
காலை :
07-00 மணி முதல் 09-00 மணி வரை !
11-00 மணி முதல் 12-00 மணி வரை !
மாலை :
02-00 மணி முதல் 04-00 மணி வரை !
06-00 மணி முதல் 07-00 மணி வரை !
இரவு :
09-00 மணி முதல் 11-00 மணி வரை !!
இன்றைய சிறப்புகள் :
இன்று
ஆடிக்கிருத்திகை !
கிருத்திகை விரதம் !!
முருகனை வழிபட குழப்பமே வேண்டாம் !
யதார்த்த வாழக்கையில் என்று வசதியோ அன்றே வழிபடலாம் !
திருவிடைக்கழி முருகன் !
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரை தரிசித்தால் பாவம் நீங்கும்.
இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார்.
சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும்,
இடதுகை தொடையில் வைத்தபடி உள்ளன. கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்தி லும், மற்றொரு லிங்கம், முருகனின் முன்புறமும் உள்ளது.
நிச்சயதார்த்த தலம்: முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம்.
முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும்,
முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைக்கழி' எனப்படுகிறது.
திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ., மயிலாடுதுறையில் இருந்து 21 கி.மீ.,
முருகப் பெருமான் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும் !!*
தெய்வீகம்..! பேரின்பம் ...!!
அன்புடன் ஆந்தையார்🚩🚩🚩
#ஆந்தை அப்டேட்