ஃபாலோவ்
ஜா ஞானசேகர்
@10769021
4,333
போஸ்ட்
4,204
பின்தொடர்பவர்கள்
ஜா ஞானசேகர்
439 காட்சிகள்
ஒரு அன்பான பெண்ணை, அவளது இதயத்தின் ஈரத்தை மொத்தமாக வற்றச் செய்து #கல்நெஞ்சக்காரியாக மாற்றிவிடாதீர்கள்.... மென்மையான ஒரு இதயம் உறைந்து போகுமானால், அந்த வலி உங்களால் தாங்க முடியாததாக இருக்கும்... அவள் தொடக்கத்தில் இப்படியில்லை. எத்தனை காயங்கள் பட்டாலும் பொறுமையோடும், புரியவைக்க வேண்டும் என்ற தவிப்போடும் உங்களையே சுற்றி வந்தவள் அவள்.... உங்கள் குறைகளைத் தெரிந்தே மறைத்து, உங்கள் மீதான நம்பிக்கையை மட்டுமே விதைத்தவள். ஆனால், அலட்சியமும், மதிக்கப்படாத அன்பும் ஒரு கட்டத்தில் அவளைக் களைப்படையச் செய்துவிடுகிறது... இன்று அவள் அமைதியாக இருக்கிறாள் என்றால், அது அவள் தோற்றுவிட்டாள் என்று அர்த்தமல்ல, இனி போரிடத் தேவையில்லை என்கிற #தெளிவு அவளுக்குக் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.... அவள் பேசாமல் விலகிச் செல்லும்போது, அவளைத் தேடி ஓடுவதில் பயனே இல்லை. ஏனெனில், அந்த மௌனத்திற்குள் அவள் உங்களை ஏற்கனவே புதைத்துவிட்டு, தன் மன அமைதியைத் தேடி வெகுதூரம் சென்றிருப்பாள்.... நீங்கள் அவளது பிரிவை உணரும்போது, அவள் உங்களை யாரென்றே தெரியாத ஒரு நிலைக்கு மாறியிருப்பாள். அதுதான் நீங்கள் பெறும் மிகப்பெரிய #தண்டனை... ஒரு பெண்ணின் மௌனம் ஆபத்தானது... தன்னை நேசிக்கும் ஒரு பெண்ணை, அவள் எவ்வளவு தூரம் உங்களை வெறுக்க முடியும் என்பதைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளாதீர்கள்.... ஒரு நல்ல பெண்ணின் அன்பு விலகும்போது, அது ஒரு முடிவற்ற மௌனமாக மாறும்.... அன்பு, நேர்மை, மீண்டும் மீண்டும் வாய்ப்புகள்... இதையெல்லாம் அவள் உங்களுக்கு வழங்கியது உங்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, உங்கள் உறவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக... ஆனால் நீங்கள் அவளது உணர்வுகளைக் காலால் மிதித்தபோது, அவள் மெல்ல மெல்லத் தன் இதயக் கதவுகளை மூடிக்கொண்டாள்.... இப்போது அவள் சண்டையிடுவதில்லை, அழுவதில்லை, தன்னுணர்வுகளை விளக்க முற்படுவதில்லை. காரணம், தகுதி இல்லாத இடத்தில் தன் அன்பைச் செலவிடக்கூடாது என்கிற பாடம் அவளுக்குக் கிடைத்துவிட்டது... ஒரு நல்ல பெண் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது நீங்கள் இழப்பது இழப்பு அல்ல, நீங்கள் இழந்தது ஒரு பொக்கிஷத்தை. அவள் குணமடைந்து நகர்ந்த பிறகு, நீங்கள் கதறினாலும் அவளது அந்தப் பழைய அன்பின் ஒரு துளியைக் கூட உங்களால் மீண்டும் பெற முடியாது... #💞Feel My Love💖 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
ஜா ஞானசேகர்
479 காட்சிகள்
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் மாட்சிமை நிறை சூசை மாமுனியே துதி வளர் உமது நற்பதம் வந்தோம் துணைசெய் தெம்மையாளும் தாதையரே #தொழிலாளர்களின்_பாதுகாவலரான_புனித_சூசையப்பரே... #எங்கள்_குடும்பத்தையும்_தொழிலையும்__ஆசீர்வதியும். பிதா சுதன் பரிசுத்த ஆவியாரின் திருப்பெயராலே ‌‌...ஆமென். #புனித_சூசையே... எங்கள் குடும்பத்தின் பாதுகாவலரே... இன்று எங்கள் குடும்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும். உம் திருமகன் இயேசுவுக்கு நாங்கள்... சாட்சியாக வாழ வரம் தாரும். #தூய_வளனாரே... எங்கள் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்தை கொடையென பெற்றுத் தாரும். நோய் நெடி பேராபத்துகளில் இருந்து எங்களை பாதுகாத்தருளும். நலிவுற்றுள்ள எங்கள் தொழில்கள் செழிக்க எங்களுக்காக இயேசுவை மன்றாடும். #திருக்குடும்ப_காவலரே... படிக்கின்ற பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தையும் ...ஞாபக சக்தியை தாரும். எங்கள் சிறு பிள்ளைகள் கடவுளுங்கு அஞ்சி நடக்கவும்... ஒழுக்கத்தில் சிறந்து வளர ஆசீர்வதியும். திருமணதிற்காக காத்திருப்போருக்கு நல்ல மண வாழ்க்கையையும்... அவர்கள் சந்ததி கடற்கரை மணலைப் போல் பழுகி பெருகச் செய்யும்‌ #புனித_சூசையே... எங்கள் வாழ்வின் எல்லா இன்ப துன்ப நேரத்தில் துணையாக இருக்கும்படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். #ஆமென்_1பர_1அருள்... #✝️இயேசுவே ஜீவன்
ஜா ஞானசேகர்
534 காட்சிகள்
பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்? அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்? என்ன இல்லை அவளிடம்? கேட்குறேன். இறைவன் மிச்சமே வைக்காமல் படைத்த அழகிய படைப்பு. அவளுக்கென்று தனி அழகு இருக்கு அவளுக்கென்று தனி தாய்மை இருக்கு அவளுக்கென்று தனி நேசம் இருக்கு...,, அவளுக்கென்று தனி பாசம் இருக்கு. அவளுக்கென்று தனி கற்பனை இருக்கு. அவளுக்கென்று தனி மனம் இருக்கு. அவளுக்கென்று தனி குழந்தைதனம் இருக்கு அவளுக்கென்று தனி ஆண்மை இருக்கு அவளுக்கென்று தனி பெண்மை இருக்கு அவளுக்கென்று தனி நளினம் இருக்கு அவளுக்கென்று தனி வெட்கம் இருக்கு அவளுக்கென்று தனி நாணம் இருக்கு அவளுக்கென்று தனி திமிர் இருக்கு அவளுக்கென்று தனி இதயம் இருக்கு அவளுக்கென்று தனி உள்ளம் இருக்கு அவளுக்கென்று தனி காதல் இருக்கு. அவளுக்கென்று தனி உலகம் இருக்கு. அவ்வளவு இருக்குங்க. அவளிடம்..., அவளிடம் மட்டும்...., அவள் ஒரு நூலகம்னு சொன்னா ரொம்ப சின்னதாகிடும்... கடல்னு சொன்னா கூட..., கடலில் கூட கரையேறி விடலாம். ஆனால் ஒரு முறை, அவள் அன்பிற்குள், அவள் அரவணைப்பிற்குள், அவளின் கரிசனைக்குள் சிக்கிக்கொண்டால், கரையேறவே ஆசை படாது மனது. அங்கேயே சிக்கி தவிக்கும். மனுசனை கிறுக்காக்கும். பையன பாடா படுத்தும். ஆனால் எல்லாவற்றையும் விட அவள் மேல் இப்படி கிரங்கி நிற்பதற்கு மிக முக்கிய காரணம். இது தான்… அதன் காரணி... இதுவே தான்... தாய்ப்பால் தான். அங்கே இருந்து தான் ஆரம்பிச்சிது அவள் மேல் உள்ள தேடல்... நம்ம முதல் உணவே அவளின் ரத்தம் தானே? அவளின் உதிரத்தால் தானே நம் உயிர்? அது தான் காரணி. வேற ஒன்னும் இல்லை. அவள் உதிரத்தில் தோன்றி, மார்பில் பால் குடித்து, மடியில் தவழ்ந்து...., அவளுடனே பின்னி பிணைந்ததால் தானோ என்னவோ, அவளைப் போலவே இருக்கும் இவளைப் பார்த்ததும், அதே தேடல் இவள் பின்னாலும் அவனை தூக்கி செல்கிறது. மீண்டும் அதே மடியில் ஒரு அரவணைப்பும், அவள் நெஞ்சுக்குழியில் தலை சாய்க்க ஒரு இடமும் வேண்டும் அவனுக்கு. அந்த தேடல் தான், தொரத்தி தொரத்தி நிற்க வைக்குது, கிரங்க வைக்குது, மயங்க வைக்குது.... மனுசனை கொஞ்ச பாடா படுத்துது? வளர்ந்துட்டடானு சொல்லி நாலு அடி தள்ளியே வச்சி பார்க்குது உலகம். ஆனால் அவன் என்றும் வளர்வதே இல்லை. இப்பவும் அவனுக்கு அந்த அரவணைப்பு வேணும். இனி அம்மாவிடம் போய் நிற்க முடியாது. அப்ப யாரிடம் தான் போவான்? அந்த அரவணைப்பிற்காக? அவன் தேவையே அது தானே. அது மட்டும் தானே. உலகத்தையே ஜெயிச்சிட்டு வாடானு சொன்னா ஜெயிச்சிட்டு வந்துடுவான். ஆனால் உள்ளுக்குள்ள அவன் மனசு யாரிடமோ தோற்க ஆசை படுகிறது. வெற்றி தோல்வி இல்லாத ஒரு சண்டை போடனும்னு ஏங்குது. இந்த தருதலதணத்தை தட்டி கேட்க ஒருத்தி வர மாட்டாளா என்று ஆசை படுறான். ஆனால் வளர்ந்த புள்ளைய என்ன திட்டுறதுனு அம்மா விட்டுவிடுகிறாள். என்னை கேட்டால், அவள் தன் அழகை வைத்து இவனை இப்படி கிரங்க வைப்பதில்லை. இவனா வேணும்னே இவளுக்குள் சிக்கி தவிக்கனும்னு ஆசைப்பட்டு தானாவே வந்து சிக்கிக் கொள்கிறான். அவனுக்கு அவள் ஒரு போதை. ஆண் மட்டும் ஒரு பெண்ணிடம் சிக்கி தவிப்பது இல்லை. பெண்ணும் ஒரு ஆணிடம் தான் சிக்கி தவிக்கிறாள். என்ன ஒன்னு, இவ்வளவு வெளிப்படையாக காண்பித்துக் கொள்வது இல்லை. என்ன தான் இன்பம் இந்த பெண்களிடத்தில் என்ற கேள்விக்கு......, பதில், காமம் என்று நினைத்தால் ஐ எம் சாரி, அது இல்லை… அவளின் அரவணைப்பு தான்..... அதே தான்…. மனதின் தேவை தான் முதல் காரணி, உடல் தேவை எல்லாம் ரெண்டாவது தான். மனைவியிடம் மயங்கி நிற்கும் அவன் தாசியிடம் மயங்கி நிற்பதில்லை.... காரணம்...., அரவணைப்பும் இவள் கொடுக்கும் நம்பிக்கையும் அவளிடம் கிடைப்பதில்லை. அவனுக்கு தேவை எல்லா சூழ்நிலையிலும் தன்னை நம்பி, துணை நிற்கும் ஒருத்தி. தன்னை முற்றிலும் நம்பும் ஒருத்தியிடம் அவன் மயங்கியே தான் நிற்பான் என்பது நியதி.., அந்த நம்பிக்கையையும், அரவணைப்பையும் உங்கள் துணைக்கு பரிசளித்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.... அவளிடம் மயங்கி நிற்பது ஒன்றும் அசிங்கமான செயல் இல்லை.. உண்மையில் அது தான் அழகு!!! அங்கே தான் கொட்டிக் கிடக்கின்றது வாழ்வின் மொத்தமும்.... மொத்தத்தில், அவள் ஒரு_________ இந்த கோடிட்ட இடத்தை நீங்க நிரப்புங்க.... #💞Feel My Love💖 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ
See other profiles for amazing content