அதுல பாருங்க தரகரே ... நீங்க கொடுத்த பையன் ஜாதகம் பொருந்திப் போகுது ஆனா பையன் நடவடிக்கை சரியில்லையே...!?
பையன் நடவடிக்கை சரியில்லையா...?
ஆமாங்க... காலைல எழுந்திரிச்சி பல்லு வெளகிட்டு மொத வேலையா சிகரெட்ட தான் பத்த வைக்கிறானாம்...
இதெல்லாம் பெரிய குறை இல்லைங்களே...?
ஒன்னு பத்த வச்சா குறை இல்லன்னு சொல்லலாம் ஆனா இவன் ஒரு நாளைக்கு மூணு பாக்கெட் பத்த வைக்கிறானாம் விசாரிச்சிட்டோம்...
பொண்டாட்டி வந்து திருத்தினா பையன் திருந்திடப்போறான்...
பொண்ண குடும்பம் நடத்த, வம்சத்த விருத்தி பண்ணத்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறோம் பையன திருத்த இல்ல... தவிர பையனுக்கு போத பாக்கு பழக்கம் வேற இருக்காம் இது நமக்கு சரிப்பட்டு வராது...
இந்தக் காலத்துப் பசங்க இப்படித்தான் இருக்காங்க... பையனுக்கு நாலு தலைமுறைக்கு சொத்து இருக்கு கொஞ்சம் யோசிங்க...
இதுல யோசிக்க ஒன்னுமில்லைங்க பொண்ணக் கட்டிக் கொடுத்துட்டு தினமும் கவலை பட்டுக்கிட்டு இருக்க முடியாது...
வெறும் சிகரெட் பாக்கு பழக்கம் தானே அதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க...
வெறும் சிகரெட் பழக்கம் மட்டுமில்லங்க டாஸ்மாக் பழக்கமும் இருக்காம் இது சரிப்பட்டு வராது விட்டுருங்க...
ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறீங்க கொஞ்சம் இறங்கி வாங்க...
இதுல இறங்கி வர ஒண்ணுமில்ல... வேணும்னா பையனுக்கு இருக்கிற ஒரே ஒரு நல்ல பழக்கத்த சொல்லுங்க இறங்கி வர்றேன்...
அதான் காலைல எழுந்திரிச்ச உடனே பல்லு வெளக்குறானே....!
யோவ்...!
#😊Positive Stories📰 #😅100% சிரிப்பு இலவசம் #🤣 லொள்ளு #👉வாழ்க்கை பாடங்கள்