ஃபாலோவ்
Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
@2661986331
884
போஸ்ட்
3,056
பின்தொடர்பவர்கள்
Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
581 காட்சிகள்
9 மணி நேரத்துக்கு முன்
திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருக்கு 22 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து கண்ணாகுறுக்கை அருகே கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலத்த காயங்களுடனும் ஒன்பது பேர் காயங்களுடனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி #bus accident# #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
7.6K காட்சிகள்
10 மணி நேரத்துக்கு முன்
திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருக்கு 22 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து கண்ணாகுறுக்கை அருகே கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலத்த காயங்களுடனும் ஒன்பது பேர் காயங்களுடனும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி #bus accident# #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
681 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
செங்கம் மற்றும் தண்டராம்பட்டு பகுதிகளில் செல்போன் டவர் பேட்டரி திருட்டு: 8 பேர் அதிரடி கைது! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் தண்டராம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள செல்போன் டவர் நிலையங்களில், தொடர்ச்சியாகப் பேட்டரிகள் மற்றும் ஒயர்கள் திருடப்பட்டு வருவதாகக் காவல் துறைக்கு அடுத்தடுத்துப் புகார்கள் வந்தன. ​இந்தத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் செங்கம் மற்றும் தண்டராம்பட்டுப் பகுதிகளைச் சேர்ந்த சிலரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ​விசாரணையில், செங்கம் அடுத்த தீதாண்டப்பட்டு மற்றும் பாரியூர் கிராமத்தைச் சேர்ந்த: ​அழகிரி (31) ​விஜயகுமார் (26) ​பவன்குமார் (26) ​விமல் (31) ​மற்றும் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த: 5. ராஜாமணி (33) 6. குமார் (26) 7. காசி (24) 8. குணசெல்வம் (27) ​ஆகிய 8 பேரும் இணைந்து பல்வேறு இடங்களில் உள்ள செல்போன் டவர் நிலையங்களில் நுழைந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பேட்டரிகள் மற்றும் காப்பர் ஒயர்களைத் திருடியதை போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் எட்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த திருட்டுப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
38.6K காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
செங்கம் அருகே பரபரப்பு: காவல் நிலையம் முன்பு காதலியை கடத்த முயன்ற பெற்றோர் - போலீசாரின் துரித நடவடிக்கையால் மீட்பு ​செங்கம்: 23 திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த உச்சிமலைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் மதன்குமார் (24). இவரும், பக்கத்து கிராமமான இறையூர் அண்ணா நகரைச் சேர்ந்த சேட்டு என்பவரது மகள் ஆனந்தியும் (21) கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். ​திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கடந்த 21.01.2026 அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். மகளைக் காணவில்லை என ஆனந்தியின் தந்தை சேட்டு, பாச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், காதலர்களைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்காக காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். ​போலீசாரின் அழைப்பை ஏற்று, நள்ளிரவு நேரத்தில் காதலர்கள் இருவரும் காரில் பாச்சல் காவல் நிலையம் வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பெண்ணின் உறவினர்கள், காதலர்கள் வந்த காரை வழிமறித்துச் சேதப்படுத்தினர். மேலும், காரில் இருந்த ஆனந்தியை வலுக்கட்டாயமாக இழுத்துச் தூக்கிச் சென்று மற்றொரு காரில் ஏற்றி கடத்த முயன்றனர். ​காவல் நிலையத்திற்கு முன்னே நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் கடத்தல் காரை மடக்கிப் பிடித்தனர். கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ​காவல் நிலையத்தில் இருதரப்பு பெற்றோர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆனந்தியின் பெற்றோர் அவர் காலில் விழுந்து கெஞ்சியதால், மனம் மாறிய ஆனந்தி காதலனைப் பிரிந்து பெற்றோருடனேயே செல்வதாகத் தெரிவித்தார். ​இதனைத் தொடர்ந்து, போலீசார் ஆனந்தியைப் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும், மதன்குமாரிடம் "இனி பெண்ணிற்கும் உனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை" என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி வாங்கிக்கொண்டு அவரையும் அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் அரங்கேறிய இந்த நாடகத்தால் பாச்சல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
825 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
செங்கம் அம்மாபாளையம் அருகே திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
255.9K காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
மின் கம்பிகள் உரசி தீ விபத்து என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம் அந்த ஆபத்தான நிகழ்வு எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்🔥🔥😲😲 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
See other profiles for amazing content