ஃபாலோவ்
S. Ramachandran
@594206777
2,646
போஸ்ட்
2,984
பின்தொடர்பவர்கள்
S. Ramachandran
581 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
*வருகிற 13-ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்* *காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.* *கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.* #அரசியல் #தெரிந்து கொள்வோம் #தேமுதிக
S. Ramachandran
521 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்க டாக்டர் ஆலோசனை வழங்குகிறார். வீட்டை பரிசோதிக்கவோ, அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில் எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும். எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில் திடீரென காலமானார். "நேற்று, நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நல்லாத்தானே இருந்தார்! அவர் ஏன் திடீரென்று இறந்தார்?" காரணம்? நீங்கள் கழிப்பறைக்குச் செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும். நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது. "மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்? நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் ஆசை உங்களை எழுப்பும்போது, திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும், மேலும் இது ரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது. மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது, அவை யாதெனில்?: 1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள். 2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்; 3. உங்கள் கால்களைக் குறைத்து, படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள். மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது, உங்கள் இதயம் பலவீனமடையாது, இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் இது நிகழலாம். #தெரிந்து கொள்வோம் #மருத்துவம்
S. Ramachandran
594 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
தோல்வி என்பது உன்னைத் தூங்க வைக்கும் தாலாட்டு அல்ல நீ நிமிர்ந்து நிற்பதற்கான "தேசிய கீதம்" #சிந்தனைக்கு #வாழ்க்கை #தெரிந்து கொள்வோம்
S. Ramachandran
888 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
வாழ்க்கை _*பிடிக்காததை முடிந்தவரை மறக்க முயலுங்கள்*_ _*"நிம்மதி" கிடைக்கும்*_ _*இரண்டுமே வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.*_ _செவி கொடுக்க மனம்_ _இல்லாதவர்களிடம்._ _குரல் கொடுத்து என்ன பயன்._ _*மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல.*_ _*தடைகளை வெற்றி கொள்ளும் வாழ்க்கை.*_ #தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு #வாழ்க்கை #வாழ்க்கை
S. Ramachandran
574 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
மகிழ்ச்சி *ஒவ்வொரு முறை*_ _*நீங்கள் சிரிக்கும்*_ _*போது உங்கள்*_ _*இருதயம் ஒட்டடை அடிக்கப்படுகிறது.*_ _*வாழ்வின் மீது*_ _*இயற்கை தெளித்த வாசனைத் தைலம் தான் சிரிப்பு.*_ _மரணத்தை தள்ளிப்போடும் மார்க்கம்தான் சிரிப்பு._ _சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்குச் சமம்._ _*பறவைக்கு அழகு சிறகு,*_ _*மனிதருக்கு அழகு சிரிப்பு,*_ _*பிடித்ததை அடிக்கடி நினைக்கப் பழகுங்கள்*_ _*"மகிழ்ச்சி" கிடைக்கும்.* #தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு
S. Ramachandran
813 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
*31 அக்டோபர் 1931* முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியான தினம் இன்று. இது தமிழின் முதல் பேசும்படம் என்று சொல்லப்பட்டாலும் தமிழில் வெளியான தனித்தமிழ் பேசும் படமல்ல; தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசிய பாடிய படமும் கூட. இப்படத்தை இம்பீரியல் மூவிடோன் நிறுவனம் சார்பாக தயாரித்தவர் இந்தியாவின் முதல் பேசும்படமான 'ஆலம் ஆரா'வைத் தயாரித்திருந்த பூனாவைச் சேர்ந்த அர்தேஷிர் இரானி என்பவராவார். 'காளிதாஸ்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் அன்றைக்கு தென்னிந்திய நாடக மேடைகளில் புகழ் பெற்றிருந்த டி.பி.ராஜலட்சுமி ஆவார். கதையின் நாயகனாக நடித்திருந்தவர் வெங்கடேசன். இப்படத்தில் துணை நடிகர்களுள் ஒருவராக நடித்திருந்தவர் பின்னாளில் திரையுலக ஜாம்பவனாகக் கருதப்பட்ட L.V.பிரசாத் அவர்கள். 1931 அக்டோபர் 31 அன்று சென்னை கினிமா சென்ட்ரல் (பின்னாளில் ஸ்ரீமுருகன்) திரையரங்கில் வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், எட்டாயிரம் ரூபாய் செலவில், எட்டு நாளில் தயாரிக்கப்பட்டு, 75000 ரூபாய் வசூலித்ததாக தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் பிரபல எழுத்தாளர் அறந்தை நாராயணன். H.M.ரெட்டி இயக்கியிருந்த இவ்வெற்றிப் படத்தின் மூலம் தமிழ்த்திரையின் முதல் நாயகியாக அறிமுகமான T.P.ராஜலெட்சுமி அவர்கள் 'சினிமாராணி', 'டாக்கி ராணி' என்கிற பட்டங்களையெல்லாம் பின்னாளில் பெற்றார் என்பது வரலாறு. #தெரிந்து கொள்வோம் #சினிமா #வரலாறு
S. Ramachandran
535 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
*அக்டோபர் 31, 1962* வால்மார்ட் அங்காடிகள் நிறுவனமான தினம் இன்று. 1962ல் அர்கான்சாவில் ரோஜெர்ஸ் என்ற இடத்தில் வால்மார்ட்டின் நிறுவனர் சாம் வால்டன் தனது முதலாவது தள்ளுபடி அங்காடியைத் திறந்தார். அதிலிருந்து தொடங்குகிறது வால்மார்ட்டின் வளர்ச்சிக் கதை. வால்மார்ட் விமான நிறுவனத்தின் முதலாவது முழுநேர விமான ஓட்டி சாம் மற்றும் பட் வால்டனுக்கு உதவிக்கு வந்தார். அவருடைய உதவியுடன் அர்கான்சாசுக்கு வெளியே சிகேஸ்டன், மோ மற்றும் கிலாரிமோர், ஒக்லா ஆகிய இடங்களில் முதலாவது அங்காடிகளைத் திறந்தார்கள். 1969 அக்டோபர் 31 அன்று அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக வால்மார்ட் அங்காடிகள் என்ற பெயரில் பெருங்குழுமமாக அறிவிக்கப்பட்டது. #தெரிந்து கொள்வோம் #வணிகம்
See other profiles for amazing content