#🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #👉வாழ்க்கை பாடங்கள்
ஆதியில் பராபரத்தில் ஆண்டவன் பரமனே தோன்றியே
ஆதிசக்தி பரத்தில் ஆதிசிவம் இணைந்து தோன்றியே
எல்லாம் சிவத்தில் ஏற்றே
சக்தி தோன்றியே
இல்லம் சக்தியில் இனிமையான நாதம் தோன்றியே
நமசிவாயம் ஆடவே நாதத்தில் விந்தும் தோன்றியே
விமலன் விந்துவில் விரைந்து
சதாசிவம் தோன்றவே
சதாசிவத்தில் மகேசன் சங்காய் சிறந்து தோன்றியே
வேதாந்தம் சித்தாந்தம் வேரூன்றிய ஆதவன் சோதியே
மகேசன் ருத்திரன் மண்ணில் மனமிரங்கி தோன்றவே
விவேகம் ருத்திரனில் விட்டிணனாய் தோன்றி வரவே
விண்ணவர் தேவனே விட்டிணன் பிரம்மாவாய் தோன்றியே
கண்ணும் கருத்துமாய் காலங்களில் பிரம்மாவில் ஆகாயம்தோன்றவே
ஆதியே அருவாக ஆகாயத்தில் பரம்பொருள் வாயுதோன்றியே
ஆதிரூபன் வாயுவில் அக்னி தீப்பிழம்பாய் தோன்றியே
அக்னியில் அப்பும் அவதரித்து
பிருதிவியும் தோன்றவே
எக்காலத்திலும் பிருதிவியில் என்றும் அன்னம் தோன்றவே
அகிலத்தில் அன்போடு அன்னத்தில் ரசமும் தோன்றியே
மகிமை நிறைந்த மகிழ்ச்சியில் ரசத்தில் உதிரம்தோன்றியே
உதிரத்தில் இணைந்து உணர்வு
மாமிசம் தோன்றவே
கதிரவன் பகலவன் காலமெல்லாம்
தாண்டவம் ஆடவே
மாமிசத்தில் பரவசமாகி மேதையும்
தோன்றி வளரவே
பூமியில் திருவருள் புரிந்து
மேதையில் அடங்கவே
அடக்கம் மச்சை அணுவில் தோன்றி நிறையவே
கடமை மச்சையில் கண்ணியம் சுக்கிலம் தோன்றியே
சுக்கிலத்தில் நித்தம் சுரோணிதம் தோன்றி கடக்கவே
சுக்கிலம் என்றும் சுரோணிதத்தில் கலந்து நீராகுமே
ஏழாம் தினத்தில் எழுந்து குமிழியாகி வருமே
தாழம்பூவாய் முப்பதாம்நாள் தவழ்ந்து உதிரம்திரண்டு பிண்டமாகுமே
அறுபதாம்நாள் பிண்டத்தில் அச்சும் சிரசும் உண்டாகுமே
மறுநாள் தொண்ணூறாம்நாள் மாமிசம்திரண்டு மூட்டுகைகால்கள் உண்டாகுமே
நூற்று இருபதாம்நாள் நுட்பமான நரம்புநாடி உண்டாகுமே
நூற்றி ஐம்பதாம்நாள் நுண்ணிய நவதுவாரங்களும் உண்டாகுமே
இருநூற்றுப் பத்தாம்நாள்
இதயதுடிப்பு பிராணன் உண்டாகுமே
அருமை மிகுந்த ஆண்டவர் அருளிய கொடையே
கர்ப்பம் சூழ்ந்துபுரளும் காற்றும் தொப்புளில் கடக்குமே
மர்மம் இல்லை மாயம் இல்லை
தெய்வீகமே
இருநூற்று நாற்பதாம்நாள் இனிதாய் அவயங்கள் உண்டாகுமே
அருவாய் நீட்டிமுடக்கி அன்னமும் தாயுண்ட சாரத்தையே
உயிரில் தொப்புள்கொடியில் ஊடுருவி திரவமாய் செல்லுமே
வயிற்றில் பிள்ளையும் வளர்ந்து பூமியில் பிறக்கவே
இருநூற்றி எழுபதாம்நாள் ஈர்ப்பும் தலைமுதல்கால்வரை துவாரமாகுமே
உருவாய் முடிவளர உண்டாகி அறிவுக்கண் திறக்குமே
முன்னூறாவதுநாள் மலைமேலிருந்து முன்தலைகீழாய் விழுவதுபோல வருமே
தன்னுயிர் நிறைந்த தன்பிண்டமதில் அபானனின் பலத்தினாலே
பூமியில் பிறக்கும் புதுமலர் குழந்தையும் அழுதவண்ணமே
சாமியே நாடிநரம்புகளில் சங்கமித்து ஐம்புலனில் இயங்குமே
பஞ்சபூதம் புலனில் படர்ந்து நித்தமும் ஒலிக்குமே
தஞ்சம் அவனே தரணியில் காப்பவன் அவனே
கொழுந்துவிட்டு காலமெல்லாம் கொடியின் முடியில் சுழலவே
வழுவாது நேசமும் வாழ்நாள் முழுவதும் தருவனே
ஓம்வடிவமாக வளர்ந்து ஓம்கார நாதத்தில் வந்தோம்
ஓம்சக்தி அருளால் ஒளியும் வீசியே பயணிக்கவே
இறுதியில் திருவுள்ளம் இணைந்து
பேரொளி அடையவே
மறுமையில் முக்தியை மகேசன்
கொடுத்து மீட்பானே
✍️ஆதி தமிழன்