*👑குழந்தை இயேசு பக்தி முயற்சி..*
அன்பின் இறை மக்களே! இறை இயேசுவின் பிறப்பு விழாவினை ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டு, நம்மையே நாம் தயாரித்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக 1000 மங்கள வார்த்தை செபிக்கக்கூடிய, நவநாள் ஒன்றை உங்களோடு பகிர்கின்றோம். இந்த நவநாள் செபத்தில் ஒரு தொடக்க செபமும், 4 சிறு செபங்களும் இணைந்திருக்கும்.
இந்த நவநாளானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 25 வரை தினமும் குழுவில் பகிரப்படும். இதனை முழுமையாக தினசரி செபித்து முடிக்கும்போது, 1000 மங்கள வார்த்தைகளை நீங்கள் செபித்திருப்பீர்கள். இந்த 1000 மங்கள வார்த்தை இறுதி நவநாளானது, குடிலின் முன்பு 25ம் தேதி செபிப்பதோடு நிறைவுபெறும். 1000 மங்கள வார்த்தைகளை, பாலன் இயேசுவுக்கு காணிக்கையாக்க, தினமும் செபிப்போம்.. மாலையாகத் தொடுப்போம். நன்றி.
பாலன் இயேசுவின் அருள் என்றும் நம்மோடு!
🕯️🎄🕯️🎁🕯️🎄🕯️
முதல் பெற்றோர் வழியாக பிறந்த எல்லாரிலும், திவ்விய குமாரனுக்குத் தாயாராயிருக்கத் தெரிந்துக்கொள்ளப்பட்ட மாதாவே, அதற்கு வேண்டிய எல்லா வரங்களையும் நிறைவாய் அடைந்த மாதாவே, அடைந்த வரங்களை கொண்டு செய்த மேலான புண்ணியங்களால் திருசுதனை கருதரித்த மாதாவே, உம்முடைய திருக்குமாரன் பிறக்கப்போகிற நாள் நெருங்கி வருகிறதென்று நீர் அறிந்திருந்தீர், அவரை பார்க்கவும், பணி புரியவும் விரும்பினீர்.
உமக்கிருந்த இந்த ஆவலைப் பார்த்து, எனக்கும் இந்தத் திருநாளில் அத்தகைய ஆவல் வளர வேண்டும். அவரை பார்த்து அவருக்கு பணிபுரிய, நீர் உம்மைத் தகுதியாக்கிக்கொள்ளச் செய்த தயாரிப்பை தியானித்து, நானும் அவருக்குத் தகுந்த பணிவிடை செய்ய, என்னையும் தயாரிக்க வேண்டும். நீர் செய்த தயாரிப்பினால், உமது பேரில் திவ்விய இயேசு பாலன் அடைந்த மகிழ்ச்சி ஒருபோதும் என் பேரில் அவருக்கு வரமுடியாது, இருப்பினும் நான், இந்த திருநாளைக் கொண்டாடுகிறதில் உம்முடைய திருக்குமாரனுக்கு என் பேரில் மகிழ்ச்சி வரச் செய்ய வேண்டும். இந்த 3 காரணங்களை குறித்து நான் செய்ய போகிற ஜெபத்தை, உம்முடைய திருப்பாதத்தில் அணிந்து, என்னுடைய கருத்து வீணாகாதபடிக்கு, நீர் எம் மன்றாட்டைக் கேட்டருள உம்மை வேண்டுகிறேன் சுவாமி.
*- ஆமென்*
1. பரிசுத்த மாதாவே, நீர் திவ்விய குமாரனுக்கு மாதாவாகக் குறிக்கப்பட்ட நேரம், ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம்.
_[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_
2. பரிசுத்த மாதாவே , நீர் திவ்விய குமாரனைப் பெற்ற மணித்துளி, ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம்.
_[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_
3. பரிசுத்த மாதாவே, நீர் முதல் முறை உம்முடைய திருக்குமாரனைக் கட்டி அனைத்து முத்தமிட்ட மணித்துளி, ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம்.
_[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_
4. பரிசுத்த மாதாவே, நீர் உம்முடைய திருக்குமாரனுக்கு முதல் முறை அமுதூட்டிய மணித்துளி, ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லாரும் சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணக்கடவோம்.
_[ 1 கர்த்தர் கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை, 1 திரித்துவ புகழ் ]_
*நிறைவு செபம்:*
_அன்பின் இறைவா! இந்த நாளிலே எம்மை நன்முறையில் தயாரிக்க, இந்த நவநாளை செபிக்க அருள் புரிந்ததற்காக நன்றி. உம்மை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஆண்டவரே! விரைந்து வாரும்!_
_*- ஆமென்.*_
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்