லக்னம்/லக்னாதிபதியின் சுப/அசுப திருவிளையாடல்கள்...
1]லக்னாதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டின் அதிபதி லக்னாதிபதிக்கு நட்பாக இருந்தால் லக்னாதிபதியின் திசை புத்தியிலோ,நின்ற அதிபதியின் திசை புத்தியிலோ நற்பலன்கள் உண்டாகும்.பகையாக இருந்தால் தீயபலன்கள் உண்டாகும்.
2]லக்னாதிபதி 6/8/12ல் நின்றாலும்,6/8/12 க்குரியவர்கள் லக்னத்தில் நின்றாலும் உடல், மன ,ஆன்ம பலம் குறையும்.லக்னாதிபதி மறைமுகமாகவோ. சூட்சுமமாகவோ ஏதேனும் ஒரு வகையில் வலுப்பெற்றிருந்தால் விதிவிலக்கு உண்டு.
3]லக்னாதிபதி சுபக்கிரகமாகி திரிகோணங்களில் நின்றாலும்,பாவக்கிரகமாகி கேந்திரங்களில் நின்றாலும் நன்மையே.பாவக்கிரகமாகி 6/8/12ல் நின்றால் மறைமுகமாகவோ, சூட்சமமாகவோ பலம்பெற்று சுபத்தன்மை அடைந்து இருப்பின் நன்மையே.
4]லக்கினாதிபதியும் 7 ம் அதிபதியும் கூடி அசுபத்தன்மை அடைந்து 6/8/12 ல் நின்றாலோ,பகை வீட்டில் நின்றாலோ நீசமாகி இருந்தாலோ திருமணம் என்பது குதிரைக்கொம்புதான்.
5]லக்னமும்/லக்னாதிபதியும் நேரடியாக பலமிழந்து இருந்தாலும்,லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னாதிபதி நின்ற நட்சத்திர அதிபதியும் பலம் பெற்றிருந்தால் லக்னம் பலமே.
6]லக்னாதிபதி எல்லா நிலைகளிலும் பலமிழந்து இருந்தால் எத்தனை யோகங்கள் இருந்தாலும்,யோக திசையே நடந்தாலும் ஜாதகர் அனுபவிக்க முடியாது.லக்னாதிபதி பலமிழந்து இருந்தால் லக்னாதிபதிக்கு உரிய ராசிக்கல்லை வெள்ளி மோதிரத்தில் செய்து அணிந்து கொள்வது லக்னத்தை பலப்படுத்தும்.லக்னாதிபதிக்குரிய தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வருவது நல்லது.உதாரணத்திற்கு செவ்வாய் என்றால் முருகப்பெருமான்.
7]லக்னம் வர்கோத்தமம் ஆகி லக்னாதிபதியும் வர்கோத்தமம் ஆகியிருப்பது யோக ஜாதகமே.லக்னாதிபதியின் திசா புத்தியில் முன்னேற்றம் உண்டாகும்.லக்னம் வர்கோத்தமம் ஆகி வேறு எந்த கிரகங்கள் வர்கோத்தமம் ஆகியிருந்தாலும் அந்த கிரகத்தின் திசா புத்தியில் நற்பலன்கள் உண்டாகும்.லக்ன யோகாதிபதியாக இருப்பின் மிகச்சிறப்பு.
8]லக்கனத்திற்கு இருபுறமும் சுபகிரகங்கள் நிற்க பொருளாதார நிலையில் படிப்படியாக உயர்வைக் கொடுக்கும்.லக்கனத்திற்கு இருபுறமும் பாவகிரகங்கள் நிற்க தரித்திர நிலை மற்றும் வறுமை நிலையை உண்டாக்கும்.பாவகிரகங்கள் நின்று சுபத்தன்மை அடைந்திருப்பின் விதிவிலக்கு உண்டு.
9]லக்னாதிபதியும் ராசிஅதிபதியும் ஒன்றுக்கொன்று பகையானாலோ 6/8 சஷ்டாஷ்க நிலையில் நின்றாலோ பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கும்.லக்னத்திற்கோ,லக்னாதிபதிக்கோ சுபகிரகத்தொடர்பு ஏற்பட்டாலோ,லக்கனத்தில் சுபக்கிரகம் நின்றாலோ விதிவிலக்கு உண்டு.
10]லக்கினாதிபதியும் 7 ம் அதிபதியும் சேர்ந்து பகை ராசியில் இருந்தாலோ,அல்லது நட்பு ராசியிலிருந்து பகை கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவை ஏற்படுத்தும்.
11]லக்னாதிபதியை விட 7 ம் அதிபதி பலம் பெற்று இருந்தால் மனைவி வழியில் ஆதாயம்,சொத்துக்கள்,செல்வங்கள் வரும்.ஆனால் மனைவிக்கு அடங்கி போக நேரிடும்.பலம் குறைந்து இருந்தால் மனைவி அடங்கி நடப்பாள்.
12]கணவன்/மனைவி இருவரின் ஜாதகங்களிலும் லக்னமும் லக்னாதிபதியும் வர்க்கோத்தமம் ஆகியிருப்பின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை கொடுக்கும்.7 ம் அதிபதி வர்க்கோத்தமம் ஆகி இருப்பின் கணவன் மனைவிக்குள் நல்ல அன்யோன்யத்தை கொடுக்கும்.
13]லக்னாதிபதி ராசிக்கட்டத்தில் பலமிழந்து இருந்தாலும்,நவாம்சத்தில் பலம் பெற்றிருந்தால் லக்னம் பலமே.லக்னாதிபதி நின்ற ராசிஅதிபதி நவாம்சத்தில் பலம் பெற்றிருந்தாலும் லக்னம் பலமே.
14]கணவன்/மனைவி இருவரின் ஜாதகங்களிலும் லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது நல்ல அமைப்பு.கணவனின் லக்னாதிபதி மனைவியின் ஜாதகத்திலும்,மனைவியின் லக்னாதிபதி கணவனின் ஜாதகத்திலும் பலம் பெற்று இருப்பதும் நல்ல பொருத்தமே.
15]லக்னாதிபதி எந்த பாவகத்தில் உள்ளாரோ அந்த பாவகத்திற்கு உண்டான வர்க்கச்சக்கரத்தில் பலம் பெறுதல்.உதாரணத்திற்கு லக்னாதிபதி 4 ல் இருந்தால் வர்க்க சக்கரத்தில் சதுர்தாம்சத்தில் பலம் பெறுவது நல்ல அமைப்பாகும்.
16]லக்கினாதிபதியும் 7 ம் அதிபதியும் கணவன்/மனைவி இருவரின் ஜாதகங்களிலோ,அல்லது ஒருவரின் ஜாதகத்திலோ ஒன்றுக்கொன்று 6/8 மற்றும் 2/12 என்ற நிலையில் அமைவது திருப்தியற்ற மணவாழ்க்கையை கொடுத்துவிடும்.
17]லக்னம்/லக்னாதிபதியோடு எந்த கிரகம் பலம் பெற்று சுபத்தன்மை அடைந்து தொடர்பு கொள்கிறதோ அந்த கிரகத்தின் திசை புத்தியில் நற்பலன்கள் உண்டாகும்.
18]லக்னாதிபதி நவாம்சத்தில் எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசிக்கு கோச்சார குரு 2,5,7,9,11ல் வரும் காலங்கள் திருமணம்,வீடு கட்டுதல், மனை வாங்குதல், வாகனம் வாங்குதல்,புதிய தொழில் தொடங்குதல் போன்ற சுபகாரியங்களுக்கு ஏற்ற காலங்களாகும்.நடப்பு திசை/புத்தியும் சாதகமாக இருந்தால் சிறப்பு.
19]8 ம் அதிபதி பலவீனப்பட்டு ஆயுள்ஸ்தானம் பாதிப்படைந்திருந்தாலும் லக்னம்/லக்னாதிபதியோடு பலம் பெற்ற,அசுபத்தன்மை அடையாத குரு பகவானின் தொடர்பு இருந்தால் ஆயுள்பலம்/தீர்க்காயுள்.
20]லக்னாதிபதி எந்நிலையிலும் கெடாமல் பலம் பெற்று சுபத்தன்மை அடைந்து இருந்து பௌர்ணமி யோகத்தில் பிறந்திருந்தால் சமுதாயத்தில் மதிப்பு,மரியாதை,அந்தஸ்தை கொடுக்கும்.கூடவே 5/9 பலம் பெற்றிருந்தால் நாடாளும் யோகத்தையே கொடுக்கும்...
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்
குறிப்பு:
அடியேனின் ஜோதிட அனுபவ ஆய்வுக்கட்டுரைப்பதிவுகளை தொடர்ந்து பார்வையிட கீழே உள்ள லிங்கில் சென்று குழுவில் இணைந்து கொள்ளவும் நண்பர்களே.
Facebook link:
https://www.facebook.com/groups/4141332219242280/?ref=share
#ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்
Page link:
https://www.facebook.com/sriselvanayakiammanastro/
Instagram link:
https://instagram.com/astro_sri_selvanayagi_amman
Subscribe to youtube link:
https://youtube.com/channel/UCVLM0NuIJeGCv5Lk-EIGUSw
உங்களின் தனிப்பட்ட சுயஜாதகத்தை கட்டண முறையில் ஆய்வு செய்ய விரும்பினால் 9842757275 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
தயவுசெய்து கமெண்ட்டில் ஜாதகத்தை பதிவிட்டு பலன் கேட்காதீர்கள்.சந்தேகங்கள் ஆலோசனைகளுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளவும் நண்பர்களே...
நன்றி