ஃபாலோவ்
Makkal Mugam
@epaper
374
போஸ்ட்
301
பின்தொடர்பவர்கள்
Makkal Mugam
545 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
#செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 மானாமதுரையில் தமுஎகச சார்பில் மக்கள் கவி பாரதி பிறந்தநாள் விழா மற்றும் அரசியல் சாசன பாதுகாப்பு கருத்து அரங்கம் நடைபெற்றது.  ***** சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மானாமதுரை கிளை சார்பாக மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் அரசியல் சாசன பாதுகாப்பு கருத்தரங்கம் கிளைத்தலைவர் தேவதாஸ் தலைமையிலும், பொன்னையா சுந்தர பாண்டியன், பா. செல்வம், குரு. செல்வம் மற்றும் நந்தினி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர் கழக செயலாளர் பொன்னுசாமி கலந்து கொண்டார். இதில் கிளைச் செயலாளர் ரசீந்திரகுமார் வரவேற்புரையும், திருமாவளவன் சிறப்புரையும் ஆற்றினர். சிறப்புரையாற்றி பேசிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மானாமதுரை ஒவெசெ மேல்நிலைப் பள்ளியை முழுமையான அரசு பள்ளியாக மாற்றுவதற்கு பரிந்துரை செய்தார். இவ்விழாவை முன்னிட்டு பரதம், பாடல்கள், கவிதை, கண்காட்சி, கலைநிகழ்ச்சி மற்றும் சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் மீனா பிரபாகரன் பரிசுகள் வழங்கினார். வாழ்த்துரை மற்றும் நன்றியுரையுடன் இவ்விழா இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் ஜீவசிந்தன், மாவட்டத் தலைவர் சிபூ, மாவட்டப் பொருளாளர் பாலமுருகன் துணைச் செயலாளர் மாணிக்கவள்ளி, சமூக ஆர்வலர் சரவணன் கருப்பையா, ஆசிரியர் முத்துராமலிங்கம், சோமசுந்தரபாரதி, முனைவர் அழகுமுருகன், சரவணன், நாரயணன்துரை, தங்கவேல், அறிவொளிபாண்டி, ஆசிரியர் வெங்கடேஷ் கமல்ராஜன், பஞ்சுராஜ், ஆதரவு அறக்கட்டளை ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், தமுஎகச நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
484 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
#செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 திண்டுக்கல் மாவட்டம், ஆயுதப்படை நரகத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற "கலையுடன் காணும் பொங்கல்" திருவிழாவில் வெற்றி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் வழங்கினார். அருகில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம்,மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் உட்பட பலன் உள்ளனர்.
Makkal Mugam
1K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
#செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், இராமாலை ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள இல்லத்தினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
See other profiles for amazing content