பிரபல நடிகர் மர்ம மரணம்
'ஜேம்சி பாய்' மற்றும் 'கோட்டி படங்களில் நடித்து புகழ்பெற்ற கனடிய நடிகர் ஸ்பென்சர் லோஃப்ராங்கோ கடந்த 18 ஆம் தேதி தனது 33வது வயதில் காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையின் விருப்பத்திற்கு எதிராக நடிப்பைத் தொடர்ந்த லோஃப்ராங்கோ, நியூயார்க் திரைப்பட அகாடமியில் பயிற்சி பெற்று ஏழு நடிப்பு விருதுகளை வென்றுள்ளார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ப#ப#ப
சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.
இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. #🎤வியாழனன்று விஜய் பிரச்சாரம்❓
இயக்குநர் நரேஷ் குப்பிலி தன்னை மிக மோசமான வார்த்தையில் குறிப்பிட்டதாக திவ்யபாரதி குற்றம்சாட்டியுள்ளார். நரேஷ் குப்பிலியின் பதிவு தொடர்பான ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திவ்யபாரதி, “பெண்களை ‘சிலகா’ அல்லது வேறு எந்த வார்த்தையாலும் அழைப்பது நகைச்சுவை அல்ல.
அது ஆழமாக வேரூன்றிய பெண் வெறுப்பின் பிரதிபலிப்பாகும். இது ஒரு முறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல. இந்த இயக்குநர் படப்பிடிப்பு தளத்திலும் இதே முறையைப் பின்பற்றியுள்ளார். பெண்களை தொடர்ந்து அவமதித்தார்.
தான் நேர்மையாக படைப்பதாகக் கூறும் கலைக்கே துரோகம் செய்துள்ளார். இதனை படத்தின் ஹீரோ அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்ததுதான் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. பெண்கள் கேலிக்கு ஆளாகாத பணியிடங்களை நான் தேர்வு செய்கிறேன். ஒவ்வொரு குரலும் முக்கியம்.
மரியாதையில் சமரசம் செய்ய முடியாத இடங்களை மட்டுமே நான் தேர்வு செய்கிறேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல. ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் இதுதான் எனது நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார். திவ்யபாரதியின் கருத்துக்கு பெண்கள், ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். #🎬 இயக்குநர் மீது நடிகை அளித்த பாலியல் புகார்! ⚠️
நடிகை துளசி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்து, குறிப்பாக அம்மா கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். அவர் 1970-களில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, டிசம்பர் 31, 2025 முதல் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #😱ஓய்வை அறிவித்த பிரபல நடிகை😮