இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 20/01/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 260
VI 1) "சாத்தானை ஜெயித்தார்கள்” (வெளி 12:11)
1) சாத்தானை ஏன் ஜெயிக்க வேண்டும் : தியானக்கட்டுரை
அன்பான தேவனுடைய பிள்ளைகளே, வானம் பூமி மற்றும் அவைகளிலுள்ள யாவற்றின் சிருஷ்டிப்புகளைப் பற்றியும், அவைகளை சிருஷ்டித்த தேவாதி தேவனாகிய கர்த்தரைப் பற்றியும், வேதாகமத்தில் பல இடங்களில் பரிசுத்த தேவ ஆவியானவரால் எழுதப்பட்டுள்ளதை வாசித்தறிய முடிகிறது.
முதலாவது தூதர்களின் சிருஷ்டிப்பையும், அவர்களுடைய விழுதலையும் பற்றி தியானம் செய்வது நமக்கு உகந்ததாயிருக்கும். சிருஷ்டிப்பின் துவக்கத்தைக் குறித்து "ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்." (ஆதி 1:1) என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது. முதலாவது தேவன் வானத்தையும் அதிலுள்ள சிருஷ்டிகளையும் பின்பு பூமியையும் அதிலுள்ள சிருஷ்டிகளையும் சிருஷ்டித்தார் என்பதை அறிகிறோம்.
"ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தி லிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது... சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." (யோவா 1:1,3)
''அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால், அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானானாலும், அதிகாரங்களானாலும். சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது." (கொலோ 1:15,16)
''இவரைச் சர்வத்துக்கும் சுதந்திரவாளியாக நியமித்தார். இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.. சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய்.'' (எபி 1:2,3)
"இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்: அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே." (வெளி 19:13)
"நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல் போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டு வந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?.'' (யோபு 38:4-8)
அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே, மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம், வானம் பூமி அவைகளிலுள்ள யாவும். தேவனும் வார்த்தையுமான, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய இயேசு மகாராஜாவினால் சிருஷ்டிக்கப்பட்ட சம்பவங்களை நமக்கு அறிவிக்கிறது. "உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.'' (வெளி 13:8). இவ்வசனத்தின்படி 'வார்த்தையாகிய' அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாகிய இயேசு ராஜா, தேவனுடைய சித்தத்தை செய்யும்படியாக தன்னை ஒப்புக் கொடுத்தார் என்பதை அறிவிக்கிறது.
வார்த்தையாகிய இயேசு ராஜாவினால் சிருஷ்டிக்கப்பட்ட இவைகள் அன்பின் சிருஷ்டிகளாய் மாத்திரமல்ல. தேவ சித்தம் செய்கிறவைகளாகவும் காணப்பட்டன. பூமிக்கு அஸ்திபாரம் போட்டு அது உண்டாக்கப்பட்டபோது அதைக்கண்டு சந்தோஷப்பட்ட ஒரு கூட்ட ஜீவராசிகள் இருந்ததாக பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. தேவாதி தேவனாகிய கர்த்தர் யோபுவைப் பார்த்து கேட்கிறார். "நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே போயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி, அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின் மேல் நூல் போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின் மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே." (யோபு 38:4-7) என்கிறார்.
அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே. மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களில் காண்கிற விடியற்காலத்து நட்சத்திரங்கள் என்பதும் தேவ புத்திரர்கள் என்பதும் யாரைக் குறிப்பிடுகிறதாய் உள்ளது? நிச்சயமாய் இவர்கள் தேவன் பூமியை உண்டாக்குவதற்கு முன்பு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டிகள் என்பதை அறிய முடிகிறது. இவர்கள் வானத்தில் தேவனுக்கு முன்பாக இருந்த பல தூதர்களின் கூட்டங்கள் என்பதை அறிய முடிகிறது. இவைகளை உறுதிப்படுத்தும்படியாக அப்.பவுல் கூறுகிறார். “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப் பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களுக்கும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லா வற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது. (கொலோ 1:16,17) இவ்வசனங்களின்படி தேவனுடைய வார்த்தையாகிய கிறிஸ்துவினால் உண்டாக்கப்பட்ட தேவ தூதகணங்கள் குறிப்பாக ஏழு வகைப்பட்டவர்கள் என்பதை அறிய முடிகிறது.
கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,
(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)
https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3ni.
#✝பைபிள் வசனங்கள் #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏