ஃபாலோவ்
A.Navajothi Arunkumar
@navajothiarun
3,040
போஸ்ட்
6,942
பின்தொடர்பவர்கள்
A.Navajothi Arunkumar
1.5K காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
காமராஜ #காமராஜர் ர் விருதுநகர் விருதாகி கருப்புத் தங்கம் பிறந்தாய்/ பெருந்தலைவர் பேராகி அருந்தலைவன் ஆனாய்/ இரக்க குணம் இதயமாகி ஏழைத் துன்பம் தொலைத்தாய்/ சத்து...ணவை சாத்தியமாக்கி சரித்திரத்தில் நின்றாய்/ ஏ...டெடுத்துப் படிக்காமல் இம்மண்ணை ஆண்டாய்/ கம்பீரம் குருதியாக கருணைமனம் குறையாமல்.. கல்வித் தந்தை ஆனாய்/ கவிழ்ந்த மீசைக்காரனென தொளதொள சட்டைக்காரனெ அழகில்கவனம் கொள்ளவில்லை. அணைகள் கட்டி ஆண்டாய்/ மக்கள் மனங்கள் தாங்கிட வாழ்ந்தாய்/ அங்கமெல்லாம் அரசியல் தங்கிட... ஆளுமையில் நீ சிறந்திட/ எங்கள் கிங்மேக்கர் ஆனாய்/ எளிமைத் தலைவனே ஏழ்மை உணர்ந்தவனே/ உணவை கொடுத்தவனே/ கல்வி உற்சாகம் அளித்தவனே/ உயர்ந்த மனிதனே/ நேர்மை நேசனே/ தாய்மண் பாசனே/ கரங்கள் கூப்பி வணங்குகிறோம். எங்கள் கர்ம வீரன் உன்னை/ மறவாதிருப்போம். உன்புகழ் நிறைந்த மண்ணை... /// கவிதை மழை அ. நவஜோதி✍️
A.Navajothi Arunkumar
620 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ ஒரு ஊர்ல ஒரு ராஜா கதைசொல்ல ஒரு வீட்டுல கூட ஒரு பாட்டி யில்லை இப்போது *இல்லாமை* 🍂🍂🍂🍂🍂🍂 தவறுக்கு மன்னிப்பும் மன்னிப்புக்கு நன்றியும் சொல்பவனைவிட நன்றிக்கும் நன்றி சொல்லி நிற்பதே *பண்புடைமை* 🍂🍂🍂🍂🍂🍂 மழலைகள் மிதித்து மிதித்து விளையாட முதுகுவலியில் குப்புறபடுத்த நிலம் மனநிம்மதியில்// *நிறைவுடைமை* 🍂🍂🍂🍂🍂🍂 மலைச்சாரலில் மழைச்சாரலில் இளையராஜா பாடல்கேட்டபடியே... ஏகாந்தத்தில் பேருந்து வாகனம். *மகிழ்வுடைமை* 🍂🍂🍂🍂🍂🍂 எத்தனை முறை நீ சரியாகக் கூட்டிப் பெருக்கி காட்டினால்கூட உன்னை சிறந்த கணிதமேதை என மாட்டேன். வறுத்தத்தில் வாத்தியார் வீட்டு விளக்குமாறு *வறுத்தமுடைமை* 🍂🍂🍂🍂🍂🍂 பாதுகாப்பாய் பலநாள் கட்டிவைத்து வளர்ப்பதெல்லாம் ஓர் நாள் வெட்டுவதற்குத்தான் புரியாத ஆடு பாசத்தில் முதலாளியோடு. *அறியாமை* 🍂🍂🍂🍂🍂🍂 கவிதை மழை அ. நவஜோதி✍️
A.Navajothi Arunkumar
551 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ ஓல்டு மாடல் ஒரு ரூபாய் காய்ன் டெலிஃபோனை ஒரு போதும் பிடிக்காது. சில்லரை இருப்பவனிடம் மட்டுமே பேசும். கவிதை மழை அ. நவஜோதி- ✍️
A.Navajothi Arunkumar
1.3K காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
#தந்தையர் கரம் பிடித்து நடக்கிறேன் கால்த் தடுக்கிடாது உன்னை பிடிக்கிறேன். நீ அழுது நான் பார்த்ததில்லை. நான் அழுக நீ விட்ட தில்லை. நடுநிசி நீ வந்தாலும் தலை தொடும் அந்த சுகம். நான் ஆசைப்பட்ட எல்லாம் நீ வாங்கித் தர ஆசைப்படும் மனம்...! வறுமையில் வாய்ப்புகள்தேடி வருத்திக் கொள்கிறாய். என் வளர்ப்பில் உன் வனப்பைத் தொலைக்கிறாய். எனைத்தூக்கிச் சுமந்தே துயரமெல்லாம் மறக்கிறாயே. எனக்கு தோல்வியற்ற வாழ்வைத் தருகிறாய். *அப்பா* கவிதை மழை நவஜோதி- ✍️
A.Navajothi Arunkumar
599 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ ஆசைகள் சுமந்து! கனவுகள் கலந்து! கால்தடம் பதிப்போம்.! பூமியில் நாமென. கலங்கா மனதொடு காலடி வைத்தோம். எங்கள் இளம் பிஞ்சுகளை கூடவே வைத்தோம். இறங்கிடுவோம் எனதானே? நினைத்தோம் இறந்திடுவோம் என்றே... நினைக்கவில்லை இறைவா! நடுங்கும் நடுவானில். நாங்கள் தடுமாறி தத்தளித்து. உயிர் பயத்தில் கூவியழைத்து உரக்கக் கத்தியது உனக்கெப்படி? கேட்கும்? எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்த... அது! ஆகாய *விமானம்* அல்ல. ஆகாய *எமன்* என்பது தெரியாமலே போனதே. எங்கள் இறைவா! அ. நவஜோதி- ✍️சுமந்து! கனவுகள் கலந்து! கால்தடம் பதிப்போம்.! பூமியில் நாமென. கலங்கா மனதொடு காலடி வைத்தோம். எங்கள் இளம் பிஞ்சுகளை கூடவே வைத்தோம். இறங்கிடுவோம் எனதானே? நினைத்தோம் இறந்திடுவோம் என்றே... நினைக்கவில்லை இறைவா! நடுங்கும் நடுவானில். நாங்கள் தடுமாறி தத்தளித்து. உயிர் பயத்தில் கூவியழைத்து உரக்கக் கத்தியது உனக்கெப்படி? கேட்கும்? எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்த... அது! ஆகாய *விமானம்* அல்ல. ஆகாய *எமன்* என்பது தெரியாமலே போனதே. எங்கள் இறைவா! அ. நவஜோதி- ✍️
A.Navajothi Arunkumar
519 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ இரவியை மறைக்க உன்இடைகூட போதும். தடைகளை உடைக்க.. உன் தன்னம்பிக்கை போதும். எழுந்து வா! விழுந்தாலும் எழுந்துவா! அ. நவஜோதி-✍️
A.Navajothi Arunkumar
612 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
வள்ளுவனே #கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️ வள்ளுவனே! எழுந்து வா! வாசற்கதவை திறந்து...வா! ஈரடியால் இழிவுகள் துடைத்து கழிவுகள் நீக்க... இன்னுமிங்கே மிச்சம் இருக்கு..! இன்னொரு வள்ளுவன் உனைப்போல் கிடைக்கவில்லை. நீயேத் திரும்பி.. வா! இந்த பூமியைத் திருத்திப்... போ! வள்ளுவம் கிடைத்த ஆணவம் எப்போதும் எம்முள் ... மலர! அ. நவஜோதி- ✍️
A.Navajothi Arunkumar
713 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
#கவிதை மழை🌨 நவஜோதி கவிதைகள் ✍️மரங்கள் மகிழ்ந்திருக்க! கிளிகள் பறந்திருக்க! பூமித்தாய் மகிழ்ந்திருக்க! பூக்களெல்லாம் சிரித்திருக்க! ஓடையது ஆடித்திளைக்க/ அதில் ஓடும் நீர் சளசளக்க/ அருவிச்சத்தம் குருவிச் சத்தம் குயிலின் சத்தம் காற்றின் சத்தம் காதில் நுழைய கானத்தின் காலைக் குழந்தை பிறந்தது... அது கவலையின்றி தவழுது இந்தநாள் இனிய நாளாக! அ.நவஜோதி-✍️
See other profiles for amazing content