ஃபாலோவ்
Shajyo
@sharane2002
263
போஸ்ட்
3,522
பின்தொடர்பவர்கள்
Shajyo
623 காட்சிகள்
12 நாட்களுக்கு முன்
#🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் . வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
Shajyo
689 காட்சிகள்
13 நாட்களுக்கு முன்
#🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #✡️மார்கழி மாத ஜோதிடம் . *சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்* . கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
Shajyo
590 காட்சிகள்
19 நாட்களுக்கு முன்
#🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 . *மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்* . மழைக்காலத்தில் மலைக்குகையில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், உறக்கம் கலைந்து கண் சிவந்து தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா? என்பதை அறிவது போல, கண்ணில் தீப்பொறி பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வரும். அதைப் போல, ககாயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். அழகிய அரியணையில் வந்து அமர்ந்து எங்களின் குறைகளை கேட்டு பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
Shajyo
4K காட்சிகள்
21 நாட்களுக்கு முன்
#🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #✡️மார்கழி மாத ஜோதிடம் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 . *ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்* . வள்ளலைப் போல கேட்டதும் பாலைப் பொழியும் பெரும் பசுக் கூட்டத்தைக் கொண்ட நந்தகோபரின் திருமகனே, அடியவர்களைக் காக்கும் அக்கறை உடையவனே, பெருமைகளைக் கொண்டவனே. இந்த உலகின் நிலையான சுடர் ஒளியே. நீ உறக்கத்தை விட்டு எழுந்து வருவாயாக. உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.
Shajyo
3.7K காட்சிகள்
24 நாட்களுக்கு முன்
#🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 . *உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்* . மத யானையைப் போன்றவனும், புறமுதுகே காட்டாத தோள் வலிமை உடையனுமான நந்தகோபாலனின் மருமகளே, நப்பின்னையே. நறுமணம் வீசும் கூந்தலை உடைய குழலியே தாழ் திறவாய். கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன. குயில் இனங்கள் கூவத் தொடங்கி விட்டன. அதை வந்து பார். உனது செந்தாமரைக் கையில் குலுங்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வெளியே வந்து உன் கணவனாகிய கண்ணனின் புகழ் பாட மகிழ்ச்சியோடு கதவைத் திறந்து வெளியே வருவாயாக.
See other profiles for amazing content