#கலைஞர்களின் #நட்சத்திரக் #கலைவிழா-2026
ஸ்டார்குருநிறுவனம் மற்றும் சாக்யாஅகாடெமி இணைந்து நடத்திய நாட்டுப்புற கலைஞர்களின் நட்சத்திரக் கலை விழா 11ம்-தேதி ஜனவரி மாதம் 2026 அன்று மதுரை காந்திநினைவுஅருங்காட்சியகம் இடத்தில் மிக ப்ரமாண்டமாக மற்றும் சிறப்பாக நடைபெற்றது...
இந்த விழாவினை சிறப்புடன் அமைத்து ஒருங்கிணைந்து நடத்திய சாக்யா அகாடெமி முதல்வர். ராதிகாசெந்திலிங்கம் அவர்கள்...
✓ பல கலைகளும் கற்று உலக அளவில் விருதினை வாங்கி உலாவி வரும் நாட்டுப்புறவியலாளர் முனைவர். செந்திலிங்கம்...
✓ நாட்டுப்புறக்கலைகள் நமது அடையாளம் அவை மறையாமல் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாட்டுப்புற கலைஞர்களை முன்னிலைப் படுத்தி கலையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு பண்பாட்டு கலை விழா மதுரையில் நடைபெற்றது...
✓ இந்தக் கலை நிகழ்ச்சி விழா நாட்டுப்புற கலை மரபுகளை பாதுகாக்கவும் , உலக மக்களிடையே பரப்பவும் நடத்தப்பட்ட ஒரு பண்பாட்டு முயற்சிதான்...
✓ முதலாவதாக நிகழ்வின் துவக்கம் கலைகளில் ஒன்றான நமது சிலம்பம் கலையை மாணவ செல்வங்கள் சிறப்பாக கம்பை சுற்றி அரங்கத்தையே அதிர வைத்தனர்...
✓ நமது பாரம்பரிய கலைகளான இசைநிகழ்ச்சி , கும்மிப்பாடல் , பறையாட்டம் , ஒயிலாட்டம் , மயிலாட்டம் , காவடியாட்டம் , காளிவேடம் , தப்பாட்டம் , மனம் கவர்ந்த நாடகங்கள் என்று பல இன்னும் அறியாத முன்னோர்களால் ஏற்றிவிட்ட கலைகளும் நடைபெற்றது...
✓ குறிப்பாக சிங்கர்பேனாஐயூப்👨🏻🎤 ஆர்கெஸ்ட்ரா🔴யூடியூப் (சென்னை) குழுவின் தலைமையில் திரைப்படபின்னணி பாடகர் , பாடலாசிரியர் நடிகருமான சிங்கர் பேனா ஐயூப் முதலாவதாக நாட்டுப்புற பாடலான அப்பா பாடலை பாடி துவக்கி வைத்தார்..,
• திருச்சியை சேர்ந்த சூர்யா என்ற பெண்மணி மற்றும் ராமநாதபுரம் சேர்ந்த முனியராஜா சேர்ந்து நாட்டுப்புற காதல் பாடலை பாடி அசத்தினர் ,
• ஈஸ்வரி என்ற பெண்மணி பக்தியோடு கலந்த பக்திபாடலை பாடினார்...
• இறுதியாக சிவகாசியை சேர்ந்த அமுதா சொந்தமாக பாடல் எழுதிய போதை ஒழிப்பு விழிப்புணர்வு பாடல் பாடி எல்லோரையும் விழிப்புணர்வோடு இருக்க சொல்லி சிறப்புடன் கூறி எல்லோரின் பாராட்டை பெற்றார்...
✓ இதில் கலந்து கொண்ட கலைஞர்கள், பொதுமக்களுக்கும் மற்றும் ஸ்டார் குரு நிறுவனம் & சாக்யா அகாடெமி அவர்களுக்கும் நான் சிங்கர் பேனா ஐயூப் மற்றும் எனது குழுவின் சார்பாக வாழ்த்துக்களுடன் புன்னகை கலந்த மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன்...
✓ கலைஞர்களுக்கு விழா நிகழ்வின் முடிவில் ஒவ்வொரு கலைஞர்களுக்கு அவர்களுக்கான விருதும் , சாக்யா அகாடெமி மற்றும் ஸ்டார் குரு நிறுவனம் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்களுக்கு வேட்டிசட்டையும் , பெண்களுக்கு சேலையும் புத்தாடை வழங்கப்பட்டது...
✓ மேலும் இதில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கும் ,
பொது மக்களுக்கும் இரவு உணவுடன் முடித்து எல்லோரும் அரங்கிலிருந்து கிளம்பி சென்றனர்...
•••நன்றி•••
சிங்கர் பேனா ஐயூப்
🪀 +918428968523
🖼️ 📸 💥 🌟 🎵 ✨
#🎵 இசை மழை #🎶90'S VOCALS #🎶90'S VOCALS #🎺இன்ஸ்ட்ரூமென்டல் மியூசிக்🎹 #🎶சிறந்த குரல்🎤