ஃபாலோவ்
sivasenthil
@sivasenthil3183
50,491
போஸ்ட்
9,381
பின்தொடர்பவர்கள்
sivasenthil
527 காட்சிகள்
57 நிமிடங்களுக்கு முன்
#பர்வதமலை தென் கைலாயம் #மல்லிகார்ஜுன சுவாமி 🙏#viral #paruvathamalai_hills #paruvadhamalai parvathamalai viral பர்வத மலையில் பார்வதி தேவி தவம் செய்ததால், "பர்வதமலை" (பார்வதியின் மலை) என்ற பெயர் வந்தது. வழிபாட்டுச் சிறப்பு- மலையேறிச் சென்று மல்லிகார்ஜுன சுவாமிக்கு உங்கள் திருக்கரங்களால் நீங்களே பூஜை செய்யலாம் #🙏ஆன்மீகம்
sivasenthil
278 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
" கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் " 1.கோவிலில் தூங்க கூடாது .. 2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது ... 3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது .. 4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது .. 5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது .. 6.குளிக்காமல் கோவில் போககூடாது ... 7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது .. 8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது.. 9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது ... 10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது.. 11.படிகளில் உட்கார கூடாது . 12.சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது . 13.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது . 14.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது . 15.கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது . 16.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது . 17.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது 18.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது. 19.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. 20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது. 21.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது 22.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.. கோவில் நூலில் இருந்து ..... நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். . #🙏ஆன்மீகம்
sivasenthil
250 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
🌹இனிய சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்கள்* 🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 1. சோமநாத் கோவில், குஜராத். தனது மாமனார் தக்ஷனால் ஏற்பட்ட சாபத்தைப் போக்க சிவனை வழிபட்ட சந்திரனின் (சோமா) பெயரால் இது அழைக்கப்படுகிறது. சிவனின் அருளைப் பெற்ற சந்திரன் மீண்டும் ஒளியைப் பெற்றான். 2. மல்லிகார்ஜுனா கோவில், ஸ்ரீசைலம், ஆந்திரப் பிரதேசம். சிவனும் பார்வதியும் கார்த்திகேயனின் இளைய சகோதரன் கணேசனுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டதால் கோபமடைந்த கார்த்திகேயனை சமாதானப்படுத்த இந்த இடத்திற்கு வந்ததாக புராணம் கூறுகிறது. 3. மஹாகாலேஷ்வர் மத்தியப் பிரதேசம். இங்குள்ள ஜோதிர்லிங்கம் தக்ஷிண்மூர்த்தி சுயம்பு "சுயமாக வெளிப்பட்டது" இது லிங்கங்கள் நிறுவப்பட்டிருக்கும் மற்றவர்களைப் போலல்லாமல் தனக்குள்ளேயே சக்தியைப் பெறுகிறது. 4. ஓம்காரேஷ்வர், மத்திய பிரதேசம். இந்த ஜோதிர்லிங்கத்தின் பின்னணியில் உள்ள புராணக்கதை , சிவனின் வரத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட வலிமைமிக்க விந்திய மலையின் அகந்தையை அகஸ்திய முனிவர் எவ்வாறு நசுக்கினார் என்று கூறுகிறது. 5. பைஜ்நாத், பீகாரில், பாட்னா இது மிகவும் சர்ச்சைக்குரிய ஜோதிர்லிங்கமாகும், ஏனெனில் இந்தியாவில் மூன்று இடங்களில் இந்த ஜோதிர்லிங்கம் உள்ளது. கடுமையான தவத்தின் போது, ​​ராவணன் தனது தலையை சிவனுக்கு அர்ப்பணித்தார். அவர் தனது பத்தாவது தலையை வெட்டப் போகும் போது, ​​சிவன் அவர் முன் தோன்றி அவருக்கு ஒரு ஜோதிர்லிங்கத்தை வழங்குகிறார், அதை அவர் இலங்கைக்கு எடுத்துச் செல்லலாம், ஆனால் வழியில் எங்கும் தரையில் வைக்காமல். இருப்பினும், அவர் விநாயகரால் ஏமாற்றப்பட்டு, அதே இடத்தில் லிங்கம் நிறுவப்பட்டது. 6. பீமாசங்கர், மகாராஷ்டிரா சிவன் ஒரு மூர்க்கமான வடிவத்தை எடுத்து, கும்பகர்ணனின் மகனான பீமனின் அடக்குமுறை அரக்கனைச் சாம்பலாக்கி, ஜோதிர்லிங்கத்தின் வடிவத்தில் இங்கேயே இருந்தார். 7. ராமேஸ்வரம், தமிழ்நாடு ராமநாதசுவாமி கோயிலில் இரண்டு ஜோதிர்லிங்கங்கள் உள்ளன. ஒன்று ராமரால் செய்யப்பட்டது, மற்றொன்று காசியிலிருந்து அனுமன் கொண்டு வந்தது, இது காசி விஸ்வநாத ஜோதிர்லிங்கத்தின் பிரதி. 8. நாகேஷ்வர், குஜராத் சிவன் நாகேஸ்வரர் வடிவில் (உடல் முழுக்க பாம்புகள்) தாருகா என்ற அரக்கனையும் அவனது படையையும் தோற்கடித்து சிறையில் அடைக்கப்பட்ட சுப்ரியா என்ற பக்தனை மீட்பதாக சிவபுராணத்தில் ஒரு கதை உள்ளது. 9. காசி விஸ்வநாதர் இந்த ஜோதிர்லிங்கம் துவாதச ஜோதிலிங்க ஸ்தோத்திரத்தில் ஒன்பதாம் இடத்தில் இருந்தாலும், இது மிக முக்கியமான ஜோதிர்லிங்கம் என்று விவாதிக்கலாம். கோஸ்வாமி துளசிதாஸ், ஆதி ஷனகராச்சாரியார், குருநானக், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், சந்த் கபீர் போன்ற அனைத்து முக்கிய துறவிகளும் இக்கோயிலுக்கு வந்துள்ளனர். இக்கோயில் ஆக்கிரமிப்பாளர்களால் பலமுறை தாக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. 10. திரிம்பகேஷ்வர், மகாராஷ்டிரா கும்பமேளா நடைபெறும், கௌதம ரிஷி மற்றும் அவரது மனைவி அஹல்யாவின் பெரும் தவத்தைக் காண சிவன் உட்பட மூன்று கோடி இந்து தெய்வங்களின் முழு தெய்வங்களும் தோன்றியதாகக் கூறுகிறது. 11. கேதார்நாத், உத்தரகாண்ட் அனைத்து ஜோதிர்லிங்கங்களிலும் மிக உயர்ந்தது மற்றும் தொலைவில் உள்ளது. சத்யுகத்தில் ஆண்ட கேதார் என்ற மன்னன் நினைவாக இக்கோவில் அழைக்கப்படுகிறது. தட்பவெப்ப நிலை காரணமாக வருடத்திற்கு ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். 12. கிரிஷ்னேஷ்வர், மஹாராஷ்டிர. ஒரு புராணத்தின் படி, குஷ்மாவின் தன்னலமற்ற பக்தியால் மகிழ்ந்த சிவன், தன் சொந்த சகோதரியான சுதேஹாவால் கொல்லப்பட்ட பிறகு தன் மகனை உயிர்ப்பித்தான். இந்தப் புனித தலங்களை தரிசிக்க எப்பொழுது சிவன் அழைப்பாரு என்று தெரியவில்லை. *சிவாலயங்களை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்* 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ மாலை வணக்கங்கள் 🌺 அப்பனே அருணாச்சலா #🙏ஆன்மீகம்
sivasenthil
206 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
🌹பெரும்பாலான தென் இந்தியாவில் இருக்கும் கோயில் கோபுரத்தின் உச்சியில் நாசி_எனப்படும்_சிலை இருக்கும். கடவுளின் அவதாரங்கள், மனித சிற்பம் என பல்வேறு சிற்பங்கள் அடங்கிய கோபுரமாக இருந்தாலும், கோபுரத்தின் உச்சியில் நாசி எனப்படும் பூதம் போன்ற ஒரு முகத்துடன் இருக்கும் ஒரு சிற்பம் ஏன் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது. 🌹கோபுர உச்சியில் செய்யப்படும் சிற்ப அமைப்பிற்கு மகாநாசி என்று பெயர் . 🌹 மகாநசியின் வடிவமைப்பு எந்த ஒரு இயற்கையான வடிவத்தை ஒத்தது அல்ல இயற்கை வடிவங்களில் பலவற்றில் ஒவ்வொன்றாக பிரித்து எடுத்து சேர்க்கப்பட்ட ஒரு கற்பனை வடிவம் குரங்கினுடைய காதும் பூதத்தினுடைய கண்களும் மூக்கும் அன்னப்பறவை யின் தோகை யானையின் தும்பிக்கை புலியின் பற்கள் ஒன்றாக சேர்த்து வடிவமைக்கப்பட்ட வடிவமாகும். 🌹நாசி முகம் எப்படி வந்தது? 🌹 ஒரு முறை அரக்கன் ஒருவன் சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். சிவனை நோக்கி பக்தியுடன் பாடி அழைத்து கடும் தவம் இருந்தான். 🌹அரக்கனின் வேண்டுதலில் மகிழ்ந்த சிவ பெருமான் நேரில் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என கேட்டார். எது குறித்தும் சிந்தனை இல்லாத சஞ்சலத்துடன் இருந்த அந்த அரக்கன், மிகவும் அசிங்கமாக ஏதோ ஒன்று கேட்டான். 🌹பல அரக்கர்கள் கடும் தவம் இருந்து சாகா வரம் வேண்டும் என வரம் கேட்பது வழக்கம். ஆனால் இந்த அராக்கனோ மோசமான, கேவளமான விஷயத்தை சிவபெருமானிடம் கேட்டதும், பொறுத்துக் கொள்ள முடியாத சிவபெருமான், உன்னை ஒழித்து கட்டுகின்றேன். உன்னை சாப்பிட ஒரு பெரிய பூதம் உண்டாகட்டும் என்றார். 🔥 சிவன் கூறியதும் அந்த அரக்கனை சாப்பிட ஒரு பெரிய_பூதம் (நாசி) உருவானது. அரக்கனை சாப்பிட துரத்தியது. நாசி_உருவம்: 🌹 போன அரக்கன், தன் தவறை உணர்ந்து சிவ பெருமானின் காலில் விழுந்து, என்னை மன்னித்து விடுங்கள். நான் கேட்டது தவறு. என்னை காப்பாற்றுங்கள் என கதறினான். 🌹 கொண்ட சிவபெருமான், பிழைத்துப் போ, இனி இப்படிப்பட்ட எண்ணத்துடன் இருக்காதே என அனுப்பினார். சிவன் உருவாக்கிய பூதமோ, அய்யனே அரக்கனை சாப்பிடத்தான் என்னை படைத்தீர்கள் ஆனால், அவனை மன்னித்து அனுப்பி வைத்து விட்டீர்கள். இப்போது நான் என்ன செய்வது? என கேட்டார். 🌹சரி அப்படியென்றால், உன்னை நீயே சாப்பிட்டுக் கொள் என்றார். சரி என்ற அந்த நாசி பூதம் தன்னைத் தானே சாப்ப்பிட்டுக் கொண்டிருந்தது. பெருமை கொடுத்த சிவன்: 🌹நாசி என்ற அந்த பூதத்தின் செயலைப் பார்த்த சிவபெருமான், அவனின் தலை மட்டும் இருப்பதை கண்டு அதிர்ந்தார். கடைசியாக உடலை சாப்பிட பயன்படுத்திய கையை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. 🌹அப்போது சிவன் உன்னை நீயே சப்பிடுகிறாயே. நீ சாதாரணமானவன் அல்ல. நீ கடவுளுக்கும் மேலானவன். நீ கடவுள்கள் வீற்றிருக்கும் கோயிலில் கடவுளை விட 🌹உயரமான இடத்தில்_இருப்பாய். 🌹 பெரும் புகழுக்குரியதும், மதிக்கத் தக்கதுமாக உன் முகம் இருக்கும் என கூறி கோயிலின் 🌹கோபுர_உச்சியில் இருப்பாயாக என சிவன் அருளினார். 🌹 பட்ட பெருமை வாய்ந்தது தான் கோயில்களின் உச்சியில் காணப்படும் அந்த நாசி எனும் 🌹பூதமுகம்_கோபுரத்தில் மட்டுமல்லாமல் 🌹கடவுள்_சிலைக்கு பின்னர் 🌹திருவாட்சியின்_நடுவிலும் இந்த நாசி எனப்படும் பூதம் காணப்படுகின்றது. பொதுவாக கோபுரத்தில் இருக்கும் பூத முகத்திற்கு #நாசி என அழைக்கப்படும். கோபுரத்தின் மேலே பெரிதாக இருக்கும் அந்த முகத்திற்கு 🌹🌹 மகா நாசி என அழைக்கப்படுகிறது. நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம #🙏ஆன்மீகம் சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
sivasenthil
359 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹தேவாரம்🌹🙏* *☀️திருமுறை4️⃣☀️* *🌹🌻பொது🌻🌹* *🦚பாடல்:0766///1070🦚* `மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா` ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து ஏழினின் னிசையி னாலு மிறைவனை யேத்த மாட்டேன் மாழையொண் கண்ணி னல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன் ஏழையே னாகி நாளு மென்செய்வான் றோன்றி னேனே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய், ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய், இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன். என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான் ?* `எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!` *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌺திருநாவுக்கரசர்🌺* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்
sivasenthil
357 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
🟢🟣🟠⚪🔴🟡🔵🟠🟣 *திருமுறை ஓதுவோம்* *தீதின்றி வாழ்வோம்* 🔴🟢🟣🟠🔵🟡⚪🔵🟠 *🙏🌹திருமந்திரம்🌹🙏* *☀️திருமுறை🔟☀️* *🦚பாடல்:2722///3000🦚* `மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா` ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *திருப்பாடல் :* 🌹எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி 🌹எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் 🌹எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் 🌹தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️ *பொழிப்புரை :* *எங்கும் நிறைந்துள்ளது சிவன் வடிவம்; எங்கு நிறைந்துள்ளனர் சிவசக்தியர்; எல்லா இடங்களும் சிதம்பரம்; எங்கு நோக்கினும் திரு நடனம்; எங்கும் உள்ளான் சிவன், எல்லாம் அவன் அருள்; நிகழ்பவை எல்லாம் அவன் அருள் விளையாட்டு!* `எம்பெருமான் சிவபெருமானை ஏத்தாத நாள்களெல்லாம் வீழ்ந்த நாட்களே. எல்லாம் வல்ல சுத்த நிர்குணமான பரமசிவனை வாழ்த்தி வாழ்க!!` *🌹நடராஜா நடராஜா🌹* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 *🌼🌸திருமூலர்🌸🌼* 🌷🌹🌻🌷🌹🌻🌷🌹🌻 #🙏ஆன்மீகம்
sivasenthil
386 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁பங்கய மாமல ரான்திரு மாலறி யாவெரி யாம்பர மாபரமன்_ _🍁பொங்கிடும் அன்பொடு போற்றிடு வார்க்கெளி யன்புரம் மூன்றெரி புன்னகையான்_ _🍁அங்கியை ஏந்திந டிப்பவன் ஏர்மலி கச்சென நச்சர வார்த்தபிரான்_ _🍁மங்கையை வாமம்ம கிழ்ந்தவன் நின்றரு ளும்பதி வாஞ்சிய நன்னகரே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_தாமரைமேல் உறையும் பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாத ஜோதி ஆன பரமன் !! பொங்கியெழும் பக்தியோடு வழிபடும் தொண்டர்களால் எளிதில் அடையப்படுபவன் !! முப்புரங்களைச் சிரித்து எரித்தவன் !! தீயை ஏந்திக் கூத்தாடுபவன் !! அழகிய அரைக்கச்சாக விஷப்பாம்பைக் கட்டிய தலைவன் !! உமையை இடப்பக்கம் ஒரு கூறாக விரும்பிய பெருமான் நீங்காமல் உறையும் தலம் திருவாஞ்சியம் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #🙏ஆன்மீகம்
sivasenthil
530 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
🛕 திருச்சி திருத்தலங்கள் – *திருவெள்ளறை பெருமாள் திருக்கோயில்* (பஞ்சரங்க தலம் – நிலையான முன்னேற்றம் தரும் பெருமாள்) 🛕 *கோயிலின் வரலாறு* திருவெள்ளறை பெருமாள் திருக்கோயில் தமிழகத்தின் மிகப் பழமையான பெருமாள் கோயில்களில் ஒன்று. 🙏 பிரம்மதேவன் இத்தலத்தில் பெருமாளை வழிபட்டு தன் படைப்புத் தொழிலை முழுமையாகச் செய்ய சக்தி பெற்றதாக தல புராணம் கூறுகிறது. 🙏 வெண்மை நிறைந்த பாறையின் மேல் கோயில் அமைந்ததால் “வெள்ளறை” என பெயர் பெற்றது. 📍 *கோயிலின் அமைவிடம்* • இடம்: திருவெள்ளறை, திருச்சி மாவட்டம் • திருச்சி நகரத்திலிருந்து சுமார் 20 கி.மீ • சாலை வசதி உள்ளது • அமைதியான கிராமச் சூழல் 🌺 *கோயிலின் சிறப்பு* 🌟 பஞ்சரங்க தலங்களில் ஒன்று (ஸ்ரீரங்கம், திருவெள்ளறை, கோவிலடி, சாரங்கபாணி, வைகுண்டம்) 🌟 இங்கு பெருமாள் புண்டரீகாட்சன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். 🌟 தாயார் செங்கமலவல்லி தாயார் கருணையின் வடிவம். 🌟 இக்கோயில் பூமி தேவியின் பெருமை விளங்கும் தலம் என்றும் கூறப்படுகிறது. 🎉 விசேஷ நாட்கள் • பங்குனி உத்திரம் • வைகுண்ட ஏகாதசி • பிரம்மோற்சவம் • ஏகாதசி தினங்கள் 🌟 *சுவாமியின் பலன்கள்* • வாழ்க்கைத் தடைகள் அகலும் • நிலையான முன்னேற்றம் • மன தெளிவு • குடும்ப ஒற்றுமை • திடீர் தடுமாற்றங்கள் குறைவு 🛕 *சுவாமியின் தோற்ற அமைப்பு* 🌺 மூலவர்: புண்டரீகாட்சன் 🌺 நின்ற திருக்கோலம் 🌺 சங்கு – சக்கரம் தரித்த கரங்கள் 🌺 சாந்தமான முகபாவம் ➡️ இங்கு பெருமாள் அமைதியும் நிலைத்தன்மையும் அருள்பாலிப்பவராக விளங்குகிறார். 🕉️ சுவாமிக்கு உகந்த விரதம் • ஏகாதசி விரதம் • சனிக்கிழமை விரதம் 👉 விரதத்துடன் வழிபட்டால் மனமும் வாழ்க்கையும் நிலையாகும் என்பது நம்பிக்கை. 🎗️ சுவாமிக்கு நேத்திக்கடன் • துளசி மாலை சாற்றுதல் • நெய் தீபம் ஏற்றுதல் • அன்னதானம் • சங்கு – சக்கரம் அர்ச்சனை ⏰ தரிசன நேரம் 🕉️ காலை: 7.00 – 12.00 🕉️ மாலை: 4.00 – 7.00 (விசேஷ நாட்களில் மாற்றம் உண்டு) 🌙 சிறந்த நாள் | உகந்த மாதம் *சிறந்த நாள்:* • ஏகாதசி • சனிக்கிழமை *உகந்த மாதம்:* • பங்குனி • மார்கழி 🖼️ *மூலவர் தரிசன அனுபவம்* 🙏 திருவெள்ளறை பெருமாள் தரிசனம் மனம் அலைபாயாமல் நிலையாக இருக்க உதவும் ஒரு ஆன்மீக அனுபவம். 🙏 *பிரார்த்தனை* “பஞ்சரங்க நாதா, என் வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் நீக்கி நிலையான முன்னேற்றப் பாதையில் எல்லோரையும் நடத்துவாயாக. #🙏ஆன்மீகம்
See other profiles for amazing content