Magic Share BannerEpisodic Banner

தேவர்

707 Posts • 34M views
Spear Balaji SB
772 views • 7 days ago
அனைவருக்கும் இனிய தேவர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 🙏 ஐப்பசி ௧௩ 🥳 "தேசியம் என் உடல்; தெய்வீகம் என் உயிர்" "தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்." "வீரமில்லாத விவேகம் கோழைத்தனம்; விவேகமில்லாத வீரம் காட்டுமிராண்டித்தனம்." "உண்மையைப் பேசு; தர்மத்தின் வழியில் நட." "கடவுள் ஒருவனே; அவனை அடைவதற்கான பாதைகள் பல." துணிவு: "அச்சமின்மையே மனிதனின் உண்மையான ஆபரணம்." தியாகம்: "சுயநலமற்ற தியாகமே சமுதாய மறுமலர்ச்சிக்கு ஒரே வழி." கடமை மற்றும் ஆன்மீகம்: "கடமையே கண் கண்ட தெய்வம்." பயமின்மை: "உண்மையைச் சொல்ல எவனுக்கும் அஞ்சத் தேவையில்லை." மனிதநேயம்: "மனித நேயமே அனைத்து மதங்களின் சாரமாகும்." சாதி மற்றும் மதம்: "சாதியும் மதமும் மனிதனைப் பிரிக்க அல்ல, பக்குவப்படுத்தவே." தேசபக்தி: "தேசத் தொண்டே ஈஸ்வரத் தொண்டு." ஒற்றுமை: "அனைத்து மக்களும் சமம்; ஒற்றுமையே நாட்டின் பலம்." தலைவனின் தகுதி: "உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்." ஒழுக்கம்: "எவ்வளவுதான் விஷய ஞானம் உள்ளவனாக, திறமைசாலியாக இருந்தாலும் சொந்த வாழ்வில் ஒழுங்கீனம் புரிந்தவனை தலைவனாகவோ, தொண்டனாகவோ ஏற்றுக் கொள்வது பெருங் கேடாய் முடியும்." அரசியல்வாதிகள்: "தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை; அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்." சட்டம் மற்றும் நீதி: "நீதியை நிலை நிறுத்துவதற்காகச் சட்டங்கள் ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்டன; ஆனால், இன்றைய நீதியோ சட்டத்திற்காகக் கைநழுவ விடப்படுகிறது." ... சொன்னதைச் செய்தவர்... செய்ததை மட்டுமே சொன்னவர்! நீதியும் நேர்மையும் நிறைந்த பசும்பொன் தேவர் திருமகனின் ஜெயந்தி விழாவில் அவர்தம் புகழைப்போற்றி வணங்குவோம்! 🙏 #devar #muthuramalinga devar #தமிழ் தேசிய அரசியல் #national #trending
3 shares