மக்கள் திரளால் நிரம்பி வழியும் சென்னையின் வணிக மையமான தியாகராய நகரின் பேருந்து நிலையத்தை மாம்பலம் இரயில் நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைபாதையினை (Skywalk) திறந்து வைத்தேன்.
நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை நெரிசலைக் குறைப்பதோடு தியாகராய நகரின் வணிகம் மென்மேலும் பெருகவும் வழிவகுக்கும்!
தியாகராய நகரின் புதிய அடையாளமாகத் திகழும்! #செய்தி
01:22
