பழைய பேப்பர்!
’’உதய் மின் திட்டம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை’’ என 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்றைய மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம் சாட்டினார். உடனே அன்றை தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விசுவாதன். ‘’பியூஸ் கோயல் குற்றச்சாட்டு நாலாந்தர அரசியல்’’ என கண்டனம் தெரிவித்தார்.
அந்த பியூஸ் கோயலுடன்தான் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இது நாகரீக அரசியலாக இருக்கலாம்!
பியூஸ் கோயல் இப்போது சென்னை வந்த போது அவரை பார்க்க போனார் கமலாலயம் போனார் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ. உடனே அவரை பார்க்க முடியவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பார்க்க முடிந்தது. 2016-ல் ’’முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை’’ என்று சொன்ன பியூஸ் கோயலின் வார்த்தைகள் நினைவுக்கு வந்து போகின்றன. #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #அரசியல் #🤭அரசியல் மீம்ஸ்

