ShareChat
click to see wallet page
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் காலை ஜெபம்* "ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்". (திருப்பாடல்கள் 98: 1. 3b-4. 5-6) தூயவர்! தூயவர்! தூயவர்! மூவுலகின் இறைவனாம் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் புகழ்கிறோம். உம்மை ஆராதனை செய்கிறோம். உமக்கு நன்றி கூறுகின்றோம். தூய்மைமிகு இறைவா! இந்த ஆண்டில் எங்களின் பாவமற்ற வாழ்க்கையினால், நாங்களும் தூயவராக இருக்க அருள் புரிவீராக! தூய வாழ்விற்கான உமது திருச்சட்டத்திலிருந்து, சிறுபொழுதும் நாங்கள் விலகாதிருக்க, தூய ஆவியின் துணையை எப்பொழுதும் உம்மிடம் வேண்டி நிற்கின்றோம். மாசில்லா மாமரியின் மாசற்ற மைந்தனே! இறைவனின் திரு செம்மறியே! தூய வாழ்விற்குத் தேவையான தூய எண்ணங்கள் மட்டுமே உதிக்கும், தூய உள்ளத்தினை எங்களுக்குத் தந்தருளும். இறைவா, இன்றைய நாளை நாங்கள் உமக்கு உகந்த முறையில் கழிக்கவும், உம் அன்பை பகிர்ந்தளிக்கும் அன்பின் கருவிகளாக நாங்கள் விளங்கவும் அருள்புரிவீராக! இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற...(1) அருள் நிறைந்த...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - ShareChat

More like this