#🌞காலை வணக்கம் #ப க்தி #🙏ஆன்மீகம் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏கா லை வணக்கம் திருத்தலங்களில் தற்போது நடைபெற்று வரும் மார்கழி திருவாய்மொழி திருநாள் (இராப்பத்து) உற்சவத்தில் மூன்று விஷயங்களை பெருமாள் செவிமடுத்து கேட்கிறார்.
1. கிருஷ்ண யஜுர் வேதம் – பராசர பட்டர் அல்லது வேதவியாச பட்டர் வம்சத்தினரால் சொல்லப்படுவது.
2. திருவாய்மொழி – ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடன் ஸ்ரீநம்பெருமாள் முன்னர் அரையர்கள் ஓதும் இசைப்பா.
3. ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் – நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் உடையவர் இவர்கள் முன்னர் தொடங்கப்பட்டு நம்பெருமாளுடன் சேர்ந்து சாற்றுமறை ஆகும். அத்யாபக கோஷ்டியால் இது சேவிக்கப்படும். இவற்றில் கிருஷ்ண யஜுர் வேதம் ஓதுவது ஸ்ரீரங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் ஸ்ரீ பராசர பட்டர் சுவாமியால் இயற்றப்பட்டது. இதில் முழுவதும் ஸ்ரீரங்கத்தின் அழகும், மேன்மையும் விளக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ரீவில்லிபுத்தூர் இராப்பத்து உற்சவத்தில் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரங்க மன்னார்.
இனிய காலை வணக்கம்.

