ShareChat
click to see wallet page
உலகிற்கு உணவிடும் உன்னதப் பெரும்பணிக்கு உறுதுணை புரிந்திட்ட இயற்கைக்கும், இன்னும் பிற உயிர்களுக்கும் உழவர் மக்கள் நன்றி கூறும் ஒப்பற்ற பெருநாள்! உயிர்மநேயம் போற்றிடும் உலகத்தமிழர் திருநாள்! 'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்' என்று பழந்தமிழ் பாடல் கூறும் பண்பாட்டு கூற்றினைப் பாருக்குப் பறைசாற்றும் தொல்தமிழர் கொண்டாடும் பண்பாட்டுத் திருவிழா! அமிழ்தினும் இனிய எங்கள் அன்னைத் தமிழ்ப் பெருவிழா! ஊரெங்கும் விழாக்கோலம் இளம் பெண்கள் மலர்க்கோலம் புதுப்பானை, புத்தரிசி, தேன்சொட்டும் புது வெல்லம், மண்மணக்கும் மஞ்சளுடன், நெஞ்சினிக்கும் இஞ்சியுடன் தமிழ்ப்பெண்கள் பொங்கலிட தை மகளே வந்திடுக! தமிழர் வாழ்வில் வளம் யாவும் தந்திடுக! தித்திக்கும் செங்கரும்புடன் சின்னஞ்சிறார் சிரிப்பொலியும், புத்தாடை தான் உடுத்தி புதுப்பொலிவு காட்டிடும் இளம்வஞ்சியர் வளையொலியும், தெருவெங்கும் எதிரொலிக்க தமிழ்த்தாயின் தலைமகளே..! தைத்திங்கள் திருமகளே..! தளரிளம் நடைபயின்று வளர்பிறைபோல் வந்திடுக..! தமிழர் வாழ்வில் நலம் யாவும் சேர்த்திடுக..! உலகெங்கும் பரவி வாழும் தமிழ்ச்சொந்தங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! தைத்திங்கள் முதல் நாளாம், தமிழ்ப்புத்தாண்டில் பொங்கட்டும் புரட்சிகர தமிழ்ப்பொங்கல்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #சீமான் #seeman #நாம் தமிழர் கட்சி🌺 #நாம் தமிழர் கட்சி #🙋‍♂ நாம் தமிழர் கட்சி
சீமான் - தமிழ்ப்புத்தாண்டு தமிழர் ஈலம் பெறுக! தை மகளே வருக! தை 01 15-01-2026 தைப்பொங்கல் தமிழர்திருநாள் வாழ்த்துகள்! 0) தித்திக்கும் செங்கரும்புடன் சின்னஞ்சிறார் சிரிப்பொலியும் புத்தாடை உடுத்தி தான் காட்டி புதுப்பொலிவு  -டும் இளம்வஞ்சியர் வளையொலியும் தெருவெங்கும் எதிரொலிக்க தமிழ்த்தாயின் தலைமகளே ! தைத்திங்கள் திருமகளே ! தளரிளம் நடைபயின்று வளர்பிறைபோல் வந்திடுக ! தமிழர் வாழ்வில் யாவும் சேர்த்திடுக ! நலம் உலகெங்கும் பரவி வாழும்  தமிழ்ச்சொந்தங்கள் அனைவருக்கும் 2 தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! தைத்திங்கள் முதல் நாளாம் தமிழ்ப்புத்தாண்டில் பொங்கட்டும் புரட்சிகர தமிழ்ப்பொங்கல்! எந்தமிழன் சீமான் ஒருங்கிணைப்பாளர்  நாம் தமிழர் கட்சி தலைமை Seeman4TN Seeman4TN Offcial SenthamizhanSeeman தமிழ்ப்புத்தாண்டு தமிழர் ஈலம் பெறுக! தை மகளே வருக! தை 01 15-01-2026 தைப்பொங்கல் தமிழர்திருநாள் வாழ்த்துகள்! 0) தித்திக்கும் செங்கரும்புடன் சின்னஞ்சிறார் சிரிப்பொலியும் புத்தாடை உடுத்தி தான் காட்டி புதுப்பொலிவு  -டும் இளம்வஞ்சியர் வளையொலியும் தெருவெங்கும் எதிரொலிக்க தமிழ்த்தாயின் தலைமகளே ! தைத்திங்கள் திருமகளே ! தளரிளம் நடைபயின்று வளர்பிறைபோல் வந்திடுக ! தமிழர் வாழ்வில் யாவும் சேர்த்திடுக ! நலம் உலகெங்கும் பரவி வாழும்  தமிழ்ச்சொந்தங்கள் அனைவருக்கும் 2 தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! தைத்திங்கள் முதல் நாளாம் தமிழ்ப்புத்தாண்டில் பொங்கட்டும் புரட்சிகர தமிழ்ப்பொங்கல்! எந்தமிழன் சீமான் ஒருங்கிணைப்பாளர்  நாம் தமிழர் கட்சி தலைமை Seeman4TN Seeman4TN Offcial SenthamizhanSeeman - ShareChat

More like this