ShareChat
click to see wallet page
💞 நபிமொழி! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ருடைய சுன்னத் தொழுகைக்குப் பின் கேட்ட துஆ! யா அல்லாஹ்! உனது பேரருளை ரஹ்மத்தைக் கேட்கிறேன்! அதன் மூலம் எனது உள்ளம் நல்வழி பெறவேண்டும்! அந்த கருணையினால் சிதறுண்ட என் காரியங்கள் ஒன்று சேரவேண்டும்! கேடடைந்த என் விஷயங்கள் ஒழுங்கு படுத்தப்படவேண்டும்! வழிகேடு தடுக்கப்பட வேண்டும் எனது தீன் மார்க்கம் செம்மையுற வேண்டும்! எனது கடன்கள் நிறைவேற வேண்டும்! எனது கண்முன் இல்லாத என் குடும்பம் ,பொருட்கள் பாதுகாப்பு பெறவேண்டும்! என் முன்னால் இருப்பவைகள் உயர்வு பெறவேண்டும்! எனது முகம் பிரகாசத்தால் வெண்மையாக வேண்டும்! அந்த ரஹ்மத்தால் எனது அமல்கள் தூய்மையடைய வேண்டும்! அதன் மூலம் எனது உள்ளத்தில் நேர்வழி உதிக்கவேண்டும்! நான் விரும்பியவைகள் எனக்கு திரும்ப கிடைக்கவேண்டும்! அந்த அளவற்ற உனது கருணையினால் அனைத்து தீயவைகளிலிருந்தும் நான் பாதுகாப்பு பெறவேண்டும்! யா அல்லாஹ்! உண்மையான ஈமானையும், குப்ரின் பால் திரும்பாத நம்பிக்கையையும், கொடுப்பாயாக! இம்மையிலும்,மறுமையிலும் உன்னுடைய கண்ணியமான சிறப்பை அடையச்செய்யும் ரஹ்மத்தையும் எனக்குஅளிப்பாயாக! உனது தீர்ப்புகளில் வெற்றியயையும்! ஷஹீதீன்கள் பெறும் விருந்தோம்பலையும்! நல்வாய்ப்பைப் பெற்றவர்களின் நல்வாழ்க்கையையும்! நபிமார்களின் நல்நேசத்தையும்! விரோதிகளுக்கெதிராக உதவியையும் உன்னிடம வேண்டுகிறேன்! யா அல்லாஹ்! எனது தேவைகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன! என்னுடைய சிந்தனை குறைவுடையதாக இருக்கிறது! எனது அமல்கள் பலவீனமாக இருக்கிறது! உனது கருணையின் பால் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்! காரியங்களை நிறைவேற்றுபவனே! நெஞ்சங்களுக்கு நலமளிப்பவனே! நீ கடல்களுக்கு இடையே தடுப்புகள் அமைத்ததுபோல் எனக்கும் நரகவேதனைகளுக்குமிடையே ! எனக்கும் கப்ரின் குழப்பங்களுக்கிடையே! எனக்கும் அழிவால் ஓலமிடுவதற்குமிடையே தடுப்பை ஏற்படுத்துவாயாக! #📗குர்ஆன் பொன்மொழிகள்
📗குர்ஆன் பொன்மொழிகள் - அல்லாஹ் UIT நொடி உன்னை மறவாத ஒரு இதயம் வேண்டும்! ஒரு போதும் உன் கட்டளையை மீறாத வாழ்வு வேண்டும்! பொறுமையும் அமைதியும் மகிழ்ச்சியும் பரக்கத்தும்நிரந்தரமாக வேண்டும்! அனைத்தையும் 606 எங்களுக்கு தந்தருள்வாயாக ரஹ்மானே! யா Cishe அல்லாஹ் UIT நொடி உன்னை மறவாத ஒரு இதயம் வேண்டும்! ஒரு போதும் உன் கட்டளையை மீறாத வாழ்வு வேண்டும்! பொறுமையும் அமைதியும் மகிழ்ச்சியும் பரக்கத்தும்நிரந்தரமாக வேண்டும்! அனைத்தையும் 606 எங்களுக்கு தந்தருள்வாயாக ரஹ்மானே! யா Cishe - ShareChat

More like this