ஆருத்ராதரிசனம் பதிவு=7
==============================
நடராஜ மூர்த்தியும் ஐந்தொழிலும்
======================================
தத்வார்த்த ஸுரூபம்
---------------------------------------------------
சிவாகமம்
===========
"டமரோஸ் ஸ்ருஷ்டிர் ஜாயேத அபயாத் ஸ்திதி ருச்யதே
அக்னேஸ் து புரோக்தம் ஸம்ஹார: திரோதானம் து குஞ்சிதாத்
அனுக்ரஹோ ஊர்த்துவ பாத:க்ருத்யம் பஞ்ச சபாபதே"
1.வலக்கையில் உள்ள உடுக்கை (நாதம்) ஒலி = ஆக்கல் தொழிலை விளக்குகிறது
2.இரண்டாவது வலதுகையின் வாழ்த்துகின்ற தோற்றம் = காத்தல் தொழிலைக் குறிக்கிறது.
3.மேல் இடைக்கையில் உள்ள சுடர் நெருப்பு = (ஒடுக்குதல்) அழித்தலைக் குறிக்கிறது.
4.கீழ் இடக்கையும், முயலகனை மிதிக்கும் வலது காலும் மறைத்தலைக் குறிக்கிறது.
குறிப்பு:- கீழ் இடக்கை மட்டும்தான் மறைத்தலைக் குறிக்கிறது என்றும், முயலகனை மிதிக்கும் வலதுகால் கொடியனவற்றை ஒடுக்குதல் என்ற தத்துவத்தைக் குறிக்கின்றது என்றும் பதினெண்சித்தர்களின் வாக்குகளிலும், வாக்கியங்களிலும், வாசகங்களிலும், நான்மறைகளிலும் மிகத் தெளிவாக குறிக்கப்படுகின்றன.
அதாவது நமசிவாய என்ற ஐந்தெழுத்து: நமச்சிவாய என்ற ஆறு எழுத்தாக வடிவப்படும்போது இந்த நடராசர் ஆறுவகை இறைமைச் செயல் நிலை விளக்கத்தை வழங்கிறது.
5. இடக்காலின் தூக்கிய திருவடி அருளுதல் எனும் தத்துவத்தை விளக்குகிறது. இந்த இடக்கால் “தூக்கிய திருவடி” அல்லது “குஞ்சிதபாதம்” எனப்படும். வலக்கால் ‘அனைத்தையும் ஒடுக்கி மறைக்கின்ற் ‘ஆடியபாதம்’ எனப்படும். சிறப்பாக, முயலகனின் (அரக்கன்) ஆட்டங்களை எல்லாம் ‘அடக்கிய பாதம்’ ஒடுக்கிய பாதம்’ அவனால் விளந்த அச்சங்களையெல்லாம் மறைத்த பாதம் அல்லது ‘அழித்த பாதம்’ எனப்படும்.
இதே கருத்தை
திருமூலர் திருமந்திரத்தில்,
=================================
அதன்துடிதோற்றம் அமைப்பில் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே!
சிதம்பர மும்மணிக்கோவை
===============================
பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பில் நானில வளாகமும்
ஏனைப் புவனமும் எண்ணீங் குயிரும் !
தானே வகுத்ததுன் தமருகக் கரமே ;
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் காப்பது உன் அமைத்தபொற் கரமே ;
தொற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே ;
ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்துநின்று
ஊட்டுவ தாகும்நின் ஊன்றிய பதமே ;
அடுத்த இன் னுயிர்கட்கு அளவில் பேரின்பம்
கொடுப்பது , முதல்வ நின் குஞ்சித பதமே "
என்று நடராசர்சிலை ‘ஐந்தொழில் வல்லான் சிலை’ அல்லது ‘ஐந்தொழில் வல்லான் நிலை’ என்று சிறப்பிக்கப்படுகிறது
ஸ்ரீநடராஜரை தரிசித்து நற்கதியடைவோமாக. 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி மாத சிறப்பு #மார்கழி ஆருத்ரா தரிசனம்#ஆருத்ரா தரிசனம் #🙏ஆன்மீகம்

