அடுத்தடுத்து மண்டல அளவிலான #களஆய்வில்_முதலமைச்சர் திட்டத்துக்குச் சென்ற நிலையில், இன்று #KolathurVisit!
என் கொளத்தூர் மக்கள் அளித்த வாஞ்சையான வரவேற்பில் அகம் மகிழ்ந்தேன்!
அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் விதமாக, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுடன் ரூ.71.81 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறப்பு மருத்துவமனைக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.
அடுத்து, ரூ.3.49 கோடியில் நிறைவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.1.14 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.61.98 கோடியில் நடைபெறும் இரயில்வே மேம்பாலப் பணிகளைப் பார்வையிட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். #kolathur visit
01:39
