ShareChat
click to see wallet page
#கிறிஸ்துமஸ் மரம் 🌲
கிறிஸ்துமஸ் மரம் 🌲 - கிறிஸ்துமஸ் மரம் உருவான கதை 15 - ம் நூற்றாண்டில் , ஜெர்மானியப் பாதிரியார் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு டிசம்பர் மாதத்தின் மத்தியில் பனி படந்த சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார் அந்த பாதிரியார் . அப்போது சின்னச் சின்ன ஓக் மரங்களின் மத்தியில் வெண்பனி படந்திருந்த ஃபிர் மரமொன்று வெளிச்சத்தில் தேவ அழகுடன் ஒளிர்வதைக் கண்டார் . அதை அவர் ஓர் இறை தரிசனமாகவே கருதினார் . இந்தக் காட்சியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார் . அடுத்த இரு வாரங்களி ல் வந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள் , தேவாலய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த அதே போன்றதொரு ஃபிர் மரத்தைத் தொங்கும் மெழுகுவர்த்திக் கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார் . அந்த வழக்கம் அதன் பிறகு ஜெர்மனி முழுவதும் பரவத் தொடங்கி பிறகு 16 - ம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது . ஓக் மற்றும் ஃபீர் மரங்களை கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிப்பதெற்கென்றே பிற நாடுகளிலும் மக்கள் அவற்றை வளர்க்கத் தொடங்கினார்கள் . இப்படி வளர்க்க முடியாதவர்கள் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களைப் பயன்படுத்துகிறார்கள் . - ShareChat

More like this