ShareChat
click to see wallet page
#கரூர் துயரம் எப்படி இருக்க வேண்டும் கட்சி தலைவர்கள்.... தமிழகம் இதுவரை காணாத கூட்டம் புரட்சித்தலைவர் முதன் முறை ஆக மக்கள் முன் பதவி ஏற்ற சென்னை அண்ணா சாலையில்... ஒரு செருப்பு கூட தொலையவில்லை அப்போ... கட்டுப்பாட்டில் கூட்டம்... பல முறை மேடைகளில் பேசும் போதே கூட்டத்தை கண்காணிப்பார் எம்ஜிஆர் ஒருமுறை கட்டுக்குள் அடங்காத கூட்டத்தில் பெண்கள் குழைந்தைகள் இருக்க மேடையில் தன் எக்ஸ்ரே கண்களில் பார்த்த எம்ஜிஆர் பேசி முடிக்கும் போது... இப்போ பெண்கள் அவரவர் குழந்தை செல்வங்கள் உடன் போக வழி விடுங்க... ஆண்கள் உடன் என்ன சொல்ல போறாரு என்று இருக்க 15 நிமிடங்கள் கழித்து தாய்மார்கள் பத்திரமா கலைந்து செல்ல... சரி இப்போ ஆண்கள் நீங்களும் பத்திரமா போங்க என்கிறார் வாத்தியார்..... ஒரு கல்யாண மண்டபம் கட்சி கூட்டம் அதில் மேடையில் இருந்த எம்ஜிஆர் ஒருவரை மேடைக்கு அழைக்க அவரும் வர பளார் பளார் என்று செவுட்டில் விட்டார் என்ன அருகில் இருக்கும் இளம் பெண்ணிடம் என்ன தப்பு பண்ணுறே உடனே வெளியே போ என்றார்... நெல்லை பாளையில் கட்சி ஆரம்பித்து பேசிய முதல் கூட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் கூரைகளில் பலர் ஏறி மாடிகளில் பழைய கட்டிடங்களில் ஏறி இருந்தவர்கள் இறங்கிய பிறகே பேசுவேன் என்று அறிவிக்க மொத்த கூட்டமும் இறங்கிய சில நொடிகளில் அந்த கூரை இடிந்து விழ... அப்போ தண்ணி பாம்புகளை பிடித்து சாக்கில் அடைத்து கூட்டத்தில் சிலர் விட பாம்புகளை கண்ட கூட்டம் சிதறி ஓட மீண்டும் அமைதி காத்து மேடையில் இருந்து பாம்புகள் சிதறி ஓடிய பின் கூட்டம் பேசினார் எம்ஜிஆர்.... பாம்புகள் விட்ட அவர் பின்னர் தலைவர் கட்சியில் அடைக்கலம் ஆனார்... இவை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் சில கட்சிகள் எதுவும் செய்யும் கொடும் குணம் கொண்டவை... அமரர் இந்திரா அம்மையார் மதுரை மாநகரில் திமுக ஆட்சி கலைக்க பட்ட பின் ஜீப்பில் நின்று ஊர்வலம் வரும் போது செருப்புகள் கற்கள் வீச பட்டு காயம் மண்டையில் காயம் அடைந்து அவர் எப்போதும் அணியும் வெள்ளை சேலையில் ரத்த கரைகள் இருக்க அது மாதவிடாய் ரத்தம் என்றார் அந்த நல்லவர்.... வன்முறை அவர்களுக்கு ரத்தத்தில் ஊறியது. அதை உடன் அவர்கள் உடன் பயணித்த எம்ஜிஆர் உணர்ந்து இருந்ததால் அவர்களை வெற்றி கொண்டார்..... தன் படப்பிடிப்பில் தன்னை பார்க்க கடும் கூட்டங்கள் வரும் போதும் கடும் வெயில் நேரத்தில் அவர்களுக்கு உரிய தண்ணீர் மற்றும் உணவு வசதி தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறார்.. அது தான் தலைமை பண்பு மேடையில் வேனில் உயரே நின்று பேசும் போது தெளிவா தெரியும் பேசும் தலைவருக்கு தெரிய வேண்டும் தலைவருக்கு கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று..... கரூர் சோக நிகழ்வுகள் சொல்லும் இவ்வளவு முன்னேறி இப்போ இருக்கும் நிலையில் என்ன இப்படி என்றே மனம் துடிக்கிறது... எங்கும் இதே நிலை.... தூத்துக்குடி லூர்து அம்மாள் என்ற இடத்தில் டூரிங்க் திரைஅரங்கம் தீ விபத்தில் விபத்தில் 110 பேர் பெண்கள் குழந்தைகள் ஆண்கள் சிக்கி உயிர் நீக்க உடனே பறந்து வந்த எம்ஜிஆர் இரண்டு நாட்கள் அங்கே இருந்து மருத்துமனை அதில் உயிர் இழந்தவர்கள் தீ காயங்கள் அடைந்த அனைவரும் தனி தனியே சந்தித்து ஆறுதல் உதவிகள் செய்தார்.... டூரிங்க் அரங்கங்கள் அன்றுடம் ஓய்வு பெற்றன.. ஒரு தலைவர் இப்படி பலர் பச்சிளம் இரு பால் குழந்தை செல்வங்கள் பெண்கள் ஆண்கள் உயிர் நீத்த செய்திகள் நிருபர்கள் திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் கேள்விகள் கேட்கும் போது தனி விமானம் அதற்க்கு கட்டணம் பல கோடிகள் கொடுத்து பறந்து சென்னை வீட்டில் அடைக்கலம் புகுந்து கொண்ட விஜய் சார் என்ன இப்படி ஒரு பதில் சொல்லிட என்ன தயக்கம் உங்களை சுற்றி இருப்பவர்கள் கவலை இல்லை எங்களுக்கு.. நேற்று நடந்த சோகத்தில் எல்லோரும் கரூர் நோக்கி இன்று ஓடி ஓடி பேட்டிகள் கொடுக்க... தயக்கம் இல்லாம வாங்க அவர்களை சந்தியுங்கள் என்ன வரும் வரட்டும் நீங்கள் உங்கள் பிரச்சார வாகனம் அதில் எங்கள் தலைவர்கள் அமரர் அண்ணா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படங்களை வைத்து வலம் வருகிறீர்கள்..நன்றி.. உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமையில் பதிவு இல்லை.... தீயசக்தி அது ஆலமரம் போல வளர்ந்து ஆட்டம் போடுகிறது... அதை மீறி அரசியல் முறையாக செய்ய பயிற்சி கொள்ளுங்கள்.. உங்கள் ரசிகர்களை முதலில் பக்குவம் அடைய பயிற்சி கொடுங்கள்... இதுவே நன்மை பயக்கும் உலகெங்கும் வாழும் புரட்சித்தலைவர் நெஞ்சங்கள் சார்பாக... துயர கரூர் சம்பவத்தில் உயிர் நீத்தவர்கள் அனைவருக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி.. சிகிச்சை பெறுவோர் நலம் பெற்று வீடு திரும்ப அவரவர் தெய்வங்களை வேண்டிக்கொள்ளும் எம்ஜிஆர் பக்தர்கள்... தீயசக்திகளை வீழ்த்த நினைக்கும் உங்கள் ஆர்வம் புரிகிறது. அதை வீழ்த்தி அனுபவம் கொண்ட எங்களுடன் சேர்ந்து பயணம் செய்யுங்கள்..... இனி உங்கள் விருப்பம் விஜய் சார்...நன்றி.. இது அரசியல் பதிவு அல்ல விழிப்புணர்வு பதிவு.
கரூர் துயரம் - DEC (eo' DEC (eo' - ShareChat

More like this